Home
News

BSNL, Jio நம்பரில் இருப்பு, டேட்டா பேலன்ஸை அறிந்து கொள்வது எப்படி?

பிஎஸ்என்எல், ஜியோ பயன்படுத்துபவர்கள் தங்களின் தினசரி தரவில் மீதமுள்ளவை மற்றும் இருப்புத் தொகை குறித்த விவரங்களை அறிவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தாலும், முதற்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையானது, மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் கிடைத்தது. பிஎஸ்என்எல் தற்போது கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பல பகுதிகளில் அதன் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. சில வட்டங்களில், பிஎஸ்என்எல் ஏற்கனவே இருக்கும் 3ஜி ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்தி 4 ஜி சேவைகளை வழங்குகிறது.

3ஜி திட்டங்களில் 4ஜி இணைய சேவை

3ஜி திட்டங்களில் 4ஜி இணைய சேவை

3ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 4ஜி வேக இணைய சேவையை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் குறித்து தெளிவாக பார்க்கையில், பிஎஸ்என்எல் 3 ஜி ப்ரீபெய்ட் திட்ட விலையில் ரீசார்ஜ் செய்திருந்தாலும் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை வழங்கக் கூடிய ஒரு மண்டலத்தில் இருந்தால் 4ஜி நெட்வொர்க் வேகத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கை

வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கை

பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த மும்முரம் காட்டி வரும் நேரத்தில், பிஎஸ்என்எல் அதன் 4 ஜி சேவையை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் முன்னோக்கி செல்லும்போதெல்லாம் அந்த நிறுவனம் ஏதாவது ஒரு சிக்கலை சந்தித்து வருகிறது. இருப்பினும் தற்போதையக் காலக்கட்டத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட்டு வருகிறது.

யுஎஸ்எஸ்டி குறியீடுகள் விவரம்

யுஎஸ்எஸ்டி குறியீடுகள் விவரம்

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் யுஎஸ்எஸ்டி குறியீடுகள் தகவலுக்காகவும் பிற சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குறியீடுகளானது ஒவ்வொரு நெட்வொர்க்குகளுக்கும் முற்றிலும் மாறுபடும். தேவையான அனைத்து தகவல்களையும் பெற தங்களது நெட்வொர்க்கின் அனைத்து யு.எஸ்.எஸ்.டி குறியீடுகளையும் அறிந்திருக்க வேண்டும்.

டயல் செய்ய வேண்டிய எண்

டயல் செய்ய வேண்டிய எண்

பிஎஸ்என்எல் இருப்பு பற்றி தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். முதலில் * 123 # என்ற எண்ணுக்கு டயல் செய்து இருப்பை அறிந்துக் கொள்ளலாம். அதேபோல் 124 * 1 # என்ற மாற்று குறியீட்டின் மூலமாகவும் பிஎஸ்என்எல் இருப்பை சரி பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ஆண்ட்ராய்டு பயனர்கள்

பிஎஸ்என்எல் ஆண்ட்ராய்டு பயனர்கள்

ஆண்ட்ராய்டு பயனர்கள் பிஎஸ்என்எல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து தங்களது பிஎஸ்என்எல் தொலைபேசி நம்பரை உள்ளிட்டு பதிவிட வேண்டும். பின் இந்த செயல்பாட்டின் மூலமாக அனைத்து தகவல்களையும் அறிந்துக் கொள்ளலாம். இதில் தினசரி அல்லது மொத்த தரவு இருப்பு காண்பிக்கப்படும்.

121 என்ற எண்ணுக்கு மெசேஜ்

121 என்ற எண்ணுக்கு மெசேஜ்

பிஎஸ்என்எல் தரவு இருப்பை சரிபார்க்க மற்றொரு வழிமுறைகள் குறித்து பார்க்கையில் தங்களது மெசேஜ் பயன்பாட்டை திறந்து BAL என டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் தரவு இருப்பு விவரங்கள் குறுஞ்செய்தியாக தங்களுக்கு அனுப்பப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ இருப்பு விவரம்

ரிலையன்ஸ் ஜியோ இருப்பு விவரம்

அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ இருப்பு விவரங்களை சரிபார்க்க, மை ஜியோ பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின் தங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு பதிவிட வேண்டும். இதில் தினசரி தரவு இருப்பு அல்லது மொத்த தரவு இருப்பு விவரங்கள் காண்பிக்கப்படும். இந்த செயலியின் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL, Jio Customers How to Check Balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X