Home
News

பிஎஸ்என்எல், ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிப்பு: ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கால அவகாசம்- உடனே ரீசார்ஜ் செய்யவும்!

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல், ஜியோ வருடாந்திர திட்டங்களில் புதிய சலுகைகள் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல்-ன் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிசம்பர் 31, 2021 (இன்று) முன் ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுக்கு பதிலாக 425 நாட்கள் வரை நீடித்து வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் ரூ.2545 என்ற விலையோடு வருகிறது. இது 336 நாட்கள் செல்லுபடியாகும், இப்போது அதன் சந்தாதாரர்களுக்கு 29 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது.

வருடாந்திர திட்டங்களில் சில சலுகைகள்

வருடாந்திர திட்டங்களில் சில சலுகைகள்

2021 ஆம் ஆண்டு முடிவடைந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில் வருடாந்திர திட்டங்களில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்என்எல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்கள் தங்கள் வருடாந்திர திட்டங்களில் செல்லுபடியாகும் காலத்தில் நீட்டிப்பை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிசம்பர் 31 2021-க்கு முன் ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்கள் வழக்கமான 365 நாட்களுக்கு பதிலாக அதன் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து 425 நாட்களாக வழங்குகிறது. இது பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டமானது பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான வரம்பற்ற இணையத்தை வழங்குகிறது. அதோடு கூடுதலாக தினசரி 100 எஸ்எம்எஸ்-கள், இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் இலவச குரல் அழைப்புகள் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈராஸ் நவ் உள்ளடக்கத்திற்கான சந்தா ஆகியவை வழங்குகிறது. இது தினசரி டேட்டா வரம்பு 3 ஜிபி முடிந்தவுடன் இதன் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ரூ.2545 என்ற விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் 336 நாட்கள் செல்லுபடியாகும். இப்போது அதன் சந்தாதாரர்களுக்கு 29 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் சலுகையை வழங்குகிறது. ஜியோ புத்தாண்டு ஆஃபர் என இது அழைக்கப்படுகிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் சலுகை ஆனது ஜனவரி 2, 2022 வரை மட்டுமே கிடைக்கும். இந்த சலுகையை பெற சந்தாதார்ரகள் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்னதாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை ரூ.2545 விலையில் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் நன்மையோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. ஸ்ட்ரீமிங் நன்மைகள் குறித்து பார்க்கையில், இதில் சந்தாதாரர்களுக்கு ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவிக்கான இலவச அணுகலை பெறலாம். திட்டத்தி்ந மொத்த டேட்டா வரம்பு ஆனது 5.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

336 நாட்கள் வேலிடிட்டி

336 நாட்கள் வேலிடிட்டி

ஜியோ வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோவின் மற்றொரு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமான ரூ.1599 என்ற நன்மைகளின் அடிப்படையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் மொத்தம் 24 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் மற்றும் ஜியோ செக்யூரிட்டி ஆகிய சந்தா அணுகலோடு வருகிறது.

ரூ.3119 மற்றும் ரூ.4199 என்ற இரண்டு வருடாந்திர திட்டம்

ரூ.3119 மற்றும் ரூ.4199 என்ற இரண்டு வருடாந்திர திட்டம்

ஜியோ ரூ.3119 மற்றும் ரூ.4199 என்ற இரண்டு வருடாந்திர திட்டங்களை கொண்டிருக்கிறது. ரூ.3119 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ரூ.4199 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டங்களானது மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.3119 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா என மொத்தம் 740 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.4199 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா என மொத்தம் 1095 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசடி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு இரண்டு திட்டங்களின் இணைய வேகமும் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைத்து வழங்கப்படும்.

365 நாட்கள் வேலிடிட்டியுடன் டேட்டா

365 நாட்கள் வேலிடிட்டியுடன் டேட்டா

பிற பிஎஸ்என்எல் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது ரூ.2399 திட்டத்தை தவிர, பிஎஸ்என்எல் ரூ.1498-க்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் டேட்டா திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா முடிந்த உடன் இதன் வேகம் 40 கேபிபிஎஸ் வேகமாக குறைத்து வழங்கப்படும். திட்டத்தில் ஆண்டுக்கு 24 ஜிபி என மொத்த வரம்பு வழங்கப்படுகிறது. பிற திட்டங்களை போன்றே பிஎஸ்என்எல் திட்டத்தில் ஆண்டுக்கு 24 ஜிபி மொத்த வரம்பு வழங்குகிறது. பிற பிஎஸ்என்எல் திட்டங்களை போன்றே பிஎஸ்என்எல் இலவச குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

500 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 100 ஜிபி டேட்டா

500 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 100 ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் அடுத்த ஆண்டுத் திட்டம் ஆனது ரூ.1999 ஆகும். இந்த திட்டத்தில் 500 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் பிறகு வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். சந்தாதாரர்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த தொகுப்பில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஈராஸ் நவ் ஓடிடி சேவைக்கான 365 நாட்கள் சந்தா அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL, Jio Announced New Year Offers on Annual Recharge plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X