Home
News

BSNL, Jio, Airtel, Vi பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை.. இந்த நம்பரில் இருந்த போன் வந்தா எடுக்காதீங்க.. காரணம்?

இந்தியாவில், சைபர்கிரைம் (Cybercrime) குற்றங்கள் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதுவொரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த 10 மாதங்களுக்குள் மட்டும், சைபர்கிரைம், ஸ்கேம்மர் (scammer) மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் (digital arrest) மோசடிகள் மூலம் இந்தியா முழுக்க சுமார் ரூ. 2,140 கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் நிற்காமல் தொடர்ந்து மக்களை பாதிப்படைய செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாதம் தோறும் சுமார் ரூ. 214 கோடிக்கும் அதிகமான தொகை மக்களிடமிருந்து சாமர்த்தியமாக திருடப்பட்டு மோசடி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இந்தியா முழுக்க பல ஆயிரம் கணக்கான மக்கள் விதவிதமான ஆன்லைன் மோசடிகளில் (online scam and scammers) சிக்கி லட்ச கணக்கில் பணத்தை இழந்து தவிக்கிறார்கள். குறிப்பாக, இந்த மோசடி செய்பவர்கள் எல்லாம், பொதுமக்களை மொபைல் நம்பர் (mobile number) மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் மோசடி வலையில் சிக்க வைத்து, மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

BSNL, Jio, Airtel, Vi பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை.. போன் வந்தா உஷார்

BSNL, Jio, Airtel, Vi பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை.. இந்த நம்பர்களை நோட் பண்ணிக்கோங்க.. உஷார்:

இதனால், பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் ஏர்டெல் (Airtel) பயனர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மொபைல் போன் அழைப்புகள் மூலம் வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசு இணைந்து ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய விஷயமாக மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, தொலைத்தொடர்பு துறை (DoT), இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் (TRAI) இணைந்து, இந்த முயற்சியின் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, உங்களிடம் பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) என்று எந்த நெட்வொர்க்கின் சிம் கார்டு (SIM card) இருந்தாலும் சரி, அவர்கள் குறிப்பிட்ட எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஏற்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்காதீங்க.. சீரியஸ் எச்சரிக்கை கொடுத்த இந்திய அரசு:

மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பொதுமக்கள் +77, +89, +85, +86 மற்றும் +84 போன்ற அடையாளம் தெரியாத சர்வதேச குறியீடுகளிலிருந்து (unfamiliar country codes) வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது. இந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எச்சரிக்கையாக கையாளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய எண்கள் எல்லாம் பெரும்பாலும் மோசடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன (originate from scammers) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அழைப்புகள் மூலம் தொடர்புக்கொள்ளும் நபர்கள் பெரும்பாலும், அரசு அதிகாரிகள், அமலாக்க இயக்குநரகம் (ED), மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), போலீஸ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல நடித்து, மக்களிடம் அபராத தொகையை செலுத்தாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இது ஒரு சில பொதுமக்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக கூறியும் பணம் பறிக்கிறார்கள்.

மற்றவர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து அவர்களையும் பாதுகாப்பாக இருக்க செய்யுங்கள்:

இது போன்ற எண்களில் இருந்து மக்கள் யாரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், முகம் தெரியாத நபர்கள் உங்களை கைது செய்ய பார்க்கிறார்கள் என்று கூறும் பொய்யை நம்பி, மக்கள் அதிலிருந்து தப்பிக்க பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்து, அவர்களையும் பாதுகாப்பாக இருக்க செய்யுங்கள் என்று இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL, Jio, Airtel, Vodafone Idea, Vi Mobile Number Users Get Direct Warning From Government About Scam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X