Home
News

TRAI சொன்னதை செஞ்சுட்டோம்.. BSNL, Jio, Airtel, Vi புது வேலிடிட்டி ரூல்ஸ் அமல்.. உங்ககிட்ட என்ன SIM இருக்கு?

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீபத்தில் இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சிம் கார்டை செயல்பாட்டில் வைக்கவேண்டுமென்ற புதிய விதியை நடைமுறைப்படுத்தியது. இதை தற்போது அணைத்து நெட்வொர்க்குகளும் ஏற்றுக்கொண்டு, அந்தந்த சிம் கார்டு எத்தனை நாட்கள் செல்லுபடியாகும் என்ற விபரங்களை வெளியிட்டுள்ளன. உங்களிடம் BSNL, Jio, Airtel, Vi என்று எந்த சிம் கார்டு இருந்தாலும் புது வேலிடிட்டி நாட்கள் குறித்த தகவலை அறிந்துகொள்ளுங்கள்.

ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் சிம் கார்டுகளை நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செய்யாமலேயே செயல்பாட்டில் வைத்திருக்க TRAI வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. TRAI-யின் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும் செலவுகளைக் குறைக்கவும் உதவும். இதன் படி, எந்தெந்த டெலிகாம் நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் எத்தனை நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

TRAI சொன்னதை செஞ்சுட்டோம்.. BSNL, Jio, Airtel, Vi வேலிடிட்டி ரூல்ஸ்..

1. புது ஜியோ சிம் கார்டு வேலிடிட்டி ரூல்ஸ் (New Jio SIM Card Validity Rules):
ஜியோ சிம் பயனர்கள் இனி 90 நீண்ட நாட்களுக்கு எந்தவித ரீசார்ஜ் திட்டத்தையும் ரீசார்ஜ் செய்யாமல் அவர்களுடைய சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்துக்கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் ரீசார்ஜ் செய்யப்படாமல் போனால், அந்த சிம் கார்டு செயலிழந்தது, வேறு ஒரு நபருக்கு அந்த சிம் உடன் கூடிய மொபைல் நம்பர் மாற்றித் தரப்படும் என்று ஜியோ தனது விதிமுறைகளை தெளிவாக தெரிவித்துள்ளது.

2. புது ஏர்டெல் சிம் கார்டு வேலிடிட்டி விதிமுறைகள் (New Airtel SIM Card Validity Rules):
ஜியோவை போல ஏர்டெல் நிறுவனமும் 90 நாட்களுக்கு எந்தவித ரீசார்ஜ் திட்டங்களும் இல்லாமல் சிம் கார்டை பயன்படுத்த இனி அனுமதிக்கும். ஆனால், 90 நாட்களுக்கு பிறகு, ஏர்டெல் கூடுதலாக 15 நாட்கள் கிரேஸ் பீரியட் என்ற 15 நாள் கூடுதல் அவகாசத்தை வழங்கும். இதற்குள் ரீசார்ஜ் செய்யப்படவில்லை என்றால் அந்த சிம் கார்டு சேவை துண்டிக்கப்பட்டு, அந்த மொபைல் நம்பர் புதிய நபருக்கு வழங்கப்படும்.

3. புது விஐ அல்லது வோடபோன் ஐடியா சிம் கார்டு வேலிடிட்டி ரூல்ஸ் (New Vi or Vodafone Idea SIM Card Validity Rules):
வோடபோன் ஐடியா நெட்வொர்க்கும் 90 நாட்கள் செல்லுபடியாகும் நன்மையை வழங்குகிறது. இருப்பினும், விஐ வாடிக்கையாளர்கள் அவர்களின் சிம் கார்டை ரீசார்ஜ் செய்து ஆக்டிவேட் செய்ய குறைந்த பட்சம் ரூ. 49 திட்டத்தை ரீசார்ஜ் செய்தாக வேண்டுமென்று வோடபோன் ஐடியா அதன் விதிமுறைகளை தெளிவாக்கியுள்ளது.

4. BSNL போட்ட ரூல்ஸ் தான் டாப் (New BSNL SIM Card Validity Rules):
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித ரீசார்ஜ் தேவையும் இல்லாமல், அதன் சிம் கார்டை 180 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைக்க தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்களிலேயே BSNL மட்டும் தான் 180 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் பீரியட் காலத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

90 நாட்களுக்கு எந்தவித ரீசார்ஜ்ஜும் மேற்கொள்ளாமல் தனியார் நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாடிக்கையாளர்கள் இனி ஆக்டிவ் நிலையில் வைத்துக்கொள்ள முடியும். மீண்டும் சிம் கார்டை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர குறைந்தது 20 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தையாவது ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்று TRAI உத்தரவிட்டுள்ளது. இந்த 20 ரூபாய் திட்டம் மூலம் 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL, Jio, Airtel and Vi Vodafone Idea SIM Validity Days Details By New TRAI Rule
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X