3300 ஜிபி டேட்டா, குரல் அழைப்பு, ஓடிடி அணுகல்- கம்மி விலையில் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, ஆக்ட்: எது சிறந்தது?
கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலம் முதல் வாழ்க்கை முறை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்றே கூறலாம். வீட்டில் இருந்து வேலை, ஆன்லைன் படிப்பு, ஸ்ட்ரீமிங் தள அணுகல், பொழுதுபோக்கு வீடியோ என பல்வேறு தேவைகளும் பிரதானமானது. இவை அனைத்துக்கும் அவசியமாக இருக்கும் ஒரே விஷயம் இணைய சேவை ஆகும். தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இவற்றை ஈடு செய்ய போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இணைய தேவை அதிகமாக இருப்பவர்கள் பிராட்பேண்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், எக்ஸிடெல் மற்றும் ஆக்ட் ஃபைபர்நெட் போன்ற பிரபலமான இணைய சேவை வழங்குனர்களிடம் இருந்து பல விலைப்பிரிவில் பிராட்பேண்ட் திட்டங்கள் வழங்குகின்றன. இதில் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், எக்ஸிடெல் மற்றும் ஆக்ட் ஃபைபர்நெட் ரூ.999 விலையில் வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் வீடியோக்கள், ஓடிடி பயன்பாட்டு அணுகல்
கொரோனா தொற்றுநோய் காரணமாக வீடுகளில் இணையத்தை பயன்படுத்தவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றனர், குழந்தைகள் வீட்டில் இருந்தே படிக்கின்றனர். பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் வீடியோக்கள், ஓடிடி பயன்பாட்டு அணுகல் என பலதேவைகளுக்கு இணைய சேவை பிரதானமாக இருந்தது. ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், ஏசிடி ஃபைபர் நெட் மற்றும் எக்ஸிடெல் போன்ற நிறுவனங்கள் ரூ.999 விலையில் வழங்கும் திட்டங்களை பார்க்கலாம்.

200 எம்பிபிஎஸ் வேக டேட்டா
பிராட்பேண்ட் திட்டங்கள் இந்தியாவில் வெறும் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் திட்டம் ரூ.999 விலையில் அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விங்க் மியூசிக் ஆகிய அணுகலுடன் பொழுதுபோக்கு தேவைகளுக்கு கவனம் செலுத்தி வழங்கப்படுகின்றன. இந்த திட்டமானது வரம்பற்ற இணையத்தை (3.3 டிபி) 200 எம்பிபிஎஸ் வேக டேட்டாவை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.999 பிராட்பேண்ட் திட்டம்
ஜியோவின் ரூ.999 பிராட்பேண்ட் திட்டமானது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ரூ.999 திட்டத்துடன் ஒப்பிடும் போது பல்வேறு ஓடிடி அணுகலுக்கான சந்தாக்களை வழங்குகிறது. மாதாந்திர திட்டமானது 150 எம்பிபிஎஸ் அதிக வேகம் மற்றும் இலவச குரல் அழைப்புகளுடன் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இது அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், வூட் செலக்ட், சோனிலிவ், ஜீ5, வூட் கிட்ஸ், சன் நெக்ஸ்ட், ஹோய்சோய், யூனிவெர்சல் ப்ளஸ், லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி ப்ளஸ், ஜியோ சினிமா, ஷீமாரூமி, ஈராஸ் நவ், ஆல்ட் பாலாஜி மற்றும் ஜியோ சாவன் ஆகியவற்றுக்கான சந்தாக்களை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமானது ரூ.999 விலையில் 3.3 டிபி (3300 ஜிபி) டேட்டாவை 200 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குகிறது. அதன் பிறகு இந்த வேகம் 2 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கு இலவச ப்ரீமியம் மெம்பர்ஷிப் அணுகலை வழங்குகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.949 விலையில் ஒரு திட்டத்தை கொண்டிருக்கிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 10 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

எக்ஸிடெல் பிராட்பேண்ட் திட்டம்
எக்ஸிடெல் ஆனது ரூ.999-க்கு மாதாந்திர திட்டத்தை வழங்குகிறது. இது வரம்பற்ற இணையம் மற்றும் 300 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. எக்ஸிடெல் ஆனது ரூ.752-ல் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டிருக்கிறது. இது ஓவர் தி டாப் (ஓடிடி) இயங்குதளத்துக்கான ஜீ5, வூட், ஈராஸ், ஷீமாரூ போன்றவைகளை கூடுதல் கட்டணமின்றி அணுகலாம். எக்ஸிடெல்-ன் 300 எம்பிபிஎஸ் மூன்று மாத திட்டத்துடன் சந்தாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் எக்ஸிடெல்-ன் கிடைக்கும் தன்மை அறிய இந்த சேவை உங்கள் பகுதியில் கிடைக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

ஆக்ட் ஃபைபர்நெட் நெட்
ஆக்ட் ஃபைபர்நெட் ரேபிட் பிளஸ் திட்டத்தை கொண்டிருக்கிறது. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 1000 ஜிபி மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இதன் எஃப்யூபி வரம்பறிகு பிறகு இதன் வேகம் 512 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்தின் விலை ஆனது ரூ.985 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications