Home
News

பிஎஸ்என்எல்: பிரபல பிராட்பேண்ட் திட்டத்தில் வரம்பற்ற டேட்டா அறிவிப்பு.!

இந்த திட்டத்தின் பதிவிறக்க வேகமானது 4ஜிபி வரையிலாக 4எம்பிபிஎஸ் வரை வழங்கும். பின்னர் குறிப்பிட்டுள்ள டேட்டா வரம்பை மீறிய பின்னர் 2 எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகம் கிடைக்கப்பெறும்.

By Muthuraj

ஒருபக்கம் ஜியோ உடனான கட்டண யுத்தம் நடக்கும் மறுகையில், பெரும்பாலான இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையேயான பிராட்பேண்ட் யுத்தமும் சத்தமின்றி நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

பிஎஸ்என்எல்: பிரபல பிராட்பேண்ட் திட்டத்தில் வரம்பற்ற டேட்டா அறிவிப்பு!

அதன் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம், அதன் 2018 ஆம் ஆண்டிற்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அதன் பல போஸ்ட்பெயிட் பட்ஜெட் பிராட்பேண்ட் திட்டங்களில் சிறப்பான திருத்தங்களை நிகழ்த்தி வருகிறது. அதிலொரு திருத்தம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன திருத்தம்.? திருத்தப்பட்ட திட்டத்தின் விலை நிர்ணயமும், நன்மைகளும் என்னவென்பதை விரிவாக காண்போம்.

வரம்பற்ற இணைய தரவை வழங்கும்

வரம்பற்ற இணைய தரவை வழங்கும்

பிஎஸ்என்எல் இப்போது அதன் ரூ.1599/- என்கிற பிராட்பேண்ட் திட்டத்திற்கான புதிய தரவு நன்மைகளை அறிவித்துள்ளது. இந்த பீபிஜி காம்போ யூஎல்டி 1599 திட்டமானது இனி பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்திற்கான வரம்பற்ற இணைய தரவை வழங்கும்.

4ஜிபி வரையிலாக 4எம்பிபிஎஸ்

4ஜிபி வரையிலாக 4எம்பிபிஎஸ்

அதாவது இந்த திட்டத்தின் பதிவிறக்க வேகமானது 4ஜிபி வரையிலாக 4எம்பிபிஎஸ் வரை வழங்கும். பின்னர் குறிப்பிட்டுள்ள டேட்டா வரம்பை மீறிய பின்னர் 2 எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகம் கிடைக்கப்பெறும். கூடுதல் டேட்டா நன்மையை தவிர்த்து ரூ.1599/- திட்டமானது இலவச அழைப்பு நன்மையையும் உள்ளன.

24 மணி நேரமும், முற்றிலும் இலவசம்

24 மணி நேரமும், முற்றிலும் இலவசம்

அதாவது இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க் உடனும் உள்ளூர் / எல்டிடி அழைப்பு நன்மையை 24 மணி நேரமும், முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இந்த பிபிஜி காம்போ திட்டமானது நீண்டகால கட்டண விருப்பத்தின் கீழும் கிடைக்கும்.

ஒரு மாத கால சேவையை இலவசம்

ஒரு மாத கால சேவையை இலவசம்

அதாவது இதன் வருடாந்திர கட்டண விருப்பமானது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால சேவையை இலவசமாக வழங்குகிறது. இதன் அர்த்தம் - நீங்கள் ஒரு வருடத்திற்கான திட்டத்தை பதிவு செய்தால், 11 மாதங்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

மூன்று மாத கால சேவையை இலவசம்

மூன்று மாத கால சேவையை இலவசம்

இதேபோல், இரண்டு ஆண்டு கால கட்டண விருப்பமானது, வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத கால சேவையை இலவசமாக வழங்குகிறது. இறுதியாக உள்ள வாய்ப்பான மூன்று ஆண்டு கால ஒப்பந்தமானது, வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத கால சேவையை இலவசமாக வழங்கும்.

இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை

இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை

இது தவிர்த்து பிஎஸ்என்எல் அதன் இலவச வரம்பற்ற இரவு அழைப்பு சேவையை திருத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னர் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை வழங்கப்பட்ட இலவச இரவு நேர அழைப்புகளுக்கான வரம்பானது இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் இலவச அழைப்பு சேவை

ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் இலவச அழைப்பு சேவை

அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் சில வட்டாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் இலவச அழைப்பு சேவையை நிறுத்தி வைத்துள்ளது என்பதும், திருத்தும் செய்யப்பட்ட அனைத்து நன்மைகளையும் ரூ.1599/- என்கிற நிறுவனத்தின் பிபிஜி காம்போ திட்டம் வழங்குகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL is Offering Up to 4 Mbps Download Speed With the Rs 1,599 Broadband Plan. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X