பிஎஸ்என்எல்-ன் அடுத்த அதிரடி: வெறும் ரூ.319/-க்கு கற்பனைக்கு எட்டாத நன்மை.!
பிஎஸ்என்ல்-ன் ரூ.187/- திட்டம் பொறுத்தவரை இந்தயாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது,மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
தொடர்ந்து பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,குறிப்பாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.319 திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல்-ன் வெறும் ரூ.319 -/ ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
பிஎஸ்என்எல், தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டடங்களில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.118/- என்கிற ஒரு புதிய காம்போ ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் டேட்டாவை வழங்குகிறது.

பிஎஸ்என்ல் ரூ.187/- திட்டம்
பிஎஸ்என்ல்-ன் ரூ.187/- திட்டம் பொறுத்தவரை இந்தயாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது, மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்
இந்த புதிய வாய்ஸ் எஸ்டிவி-க்கள் ஆனது நிறுவனத்தின் தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ரூ.99/- ஆனது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் விலை அளவில் போட்டியிடுகிறது.

எஸ்எம்எஸ் நன்மை.?
ஜியோவின் ரூ.98/- ஆனது குரல் அழைப்பு மட்டுமின்றி மற்றும் தரவு சேவைகளையும் வழங்குகின்றது. உடன் பிஎஸ்என்எல் இந்த திட்டங்களுடன் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இவைகள் முழுமையான வாய்ஸ் திட்டங்களாக இருக்கலாம்.

வரம்பற்ற குரல் அழைப்பு
ரூ.99/- என்கிற வாய்ஸ் எஸ்.டி.வி மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசுகையில், வீட்டு வட்டத்தில் உள்ள எந்தவொரு நெட்வர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மற்றும் , இது மும்பை மற்றும் தில்லி தவிர இதர அனைத்து வட்டத்திலும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் வழங்குகிறது.

பான்-இந்தியா அடிப்படையில்
மறுகையில் உள்ள ரூ.319/- ஆனது ரூ.99/0 வழங்கும் அதே சலுகைகளை அளிக்கிறது. ஆனால் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். பான்-இந்தியா அடிப்படையில் இந்த திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வதற்காக பிஎஸ்என்எல்-ன் வலைத்தளத்தை அணுகவும்.


Click it and Unblock the Notifications