100% அன்லிமிடெட் டேட்டா + வாய்ஸ்: இதை நிகழ்த்தும் முதல் நிறுவனம் பிஎஸ்என்எல் தான்.!
ரூ.1,595/- என்கிற வரம்பற்ற திட்டமானது அதன் குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை வரம்பின்றி மொத்தம் ஒருமாத காலத்திற்கு அளிக்கிறது.
இதற்கு மேல் அல்லது இதைவிட சிறந்த ப்ரீபெயிட் திட்டங்களை அறிமுகம் செய்ய ஒன்றுமே இல்லை என்கிற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்ட இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் திட்டங்களை தேடுகின்றனர்.

அப்படியான ஒரு தேடலில் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திடம் சிக்கியது யோசனை தான் பிபிஎல் 1595 திட்டம். இந்த திட்டம் வரம்பற்ற பயன்களை காம்போ (அதாவது வரம்பற்ற டேட்டா + வரம்பற்ற அழைப்புகள்) வழங்குகிறது.

குரல் அழைப்புகள் மற்றும் தரவு
ரூ.1,595/- என்கிற வரம்பற்ற திட்டமானது அதன் குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை வரம்பின்றி மொத்தம் ஒருமாத காலத்திற்கு அளிக்கிறது. அதே நேரத்தில் இதன் எஸ்எம்எஸ் சலுகையில் மட்டும் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும்
உத்தியோகபூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1595/- திட்டம் கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தின்கீழ் இணையும் புதிய வாடிக்கையாளராக இருந்தால் ரூ.500/- என்கிற செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்.

எந்தவொரு எல்லையும் கிடையாது
இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசனினால், இது வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இங்கு இரண்டு நன்மைகள் உள்ளன: முதலாவதாக, அழைப்புகள் உண்மையிலேயே வரம்பற்றவை, எந்தவொரு எல்லையும் கிடையாது.

வேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மை
இரண்டாவதாக, பயனர் ஒரு லேண்ட்லைன் எண்ணுக்கு கூட குரல் அழைப்புகளை நிகழ்த்தலாம். உடன் எந்தவொரு வரம்பும் மற்றும் வேக கட்டுப்பாடும் இல்லாத தரவு நன்மையையும் அனுபவிக்கலாம். இதுபோல் எந்த வரம்பும் இல்லாமல் காம்போ அழைப்புகளை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தான்.

250 எஸ்எம்எஸ்
எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த திட்டம் ஒரு பில்லிங் சுழற்சியின்கீழ் 250 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் பல பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா, டெலினார் போன்ற நிறுவனங்களின் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications