அள்ளி கொடுத்த பிஎஸ்என்எல்.. இனி 412 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளது. அதாவது நேற்று ஏர்டெல் நிறுவனம் பல மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. இதனால் கம்மி விலையில் ரீசார்ஜ் செய்யும் பல பயனர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி நன்மையை வழங்கி உள்ளது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆகஸ்ட் 15 அன்று வரவிருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு தற்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்நிறுவனம் வைத்துள்ள ரூ.599 மற்றும் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் ஒடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications