பிஎஸ்என்எல் தரமான IPL சம்பவம்.. ரூ.251-க்கு 251ஜிபி டேட்டா.. எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா?
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது இந்நிறுவனம். இந்நிலையில் மலிவு விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஐபிஎல் சீசனை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களை இலக்காகக் கொண்டு ரூ.251 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.251 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 251 recharge plan) ஆனது மொத்தமாக 251ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் இது ஒரு டேட்டா திட்டம் ஆகும். எனவே அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்காது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். கம்மி விலையில் அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில பட்ஜெட் விலை திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த ரூ.485 திட்டத்தில் கிடைக்கின்றன.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் . மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan)ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.
பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 160 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம்.குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த ரூ.997 திட்டத்தில் கிடைக்கின்றன.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








