பிஎஸ்என்எல் அதிரடி: ஜியோவிற்கு எதிராய் ரூ.187-க்கு அன்லிமிடெட் டேட்டா.!

இந்த திருத்தத்தின் வழியாக நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த திட்டங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது.

|

அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், மெல்ல மெல்ல ஜியோவிற்கு எதிரான கட்டண யுத்தத்திற்கு திரும்புகிறது என்றே கூறலாம். நேற்று, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிரபலமான ரூ.429/- மற்றும் ரூ.485/- ஆகிய இரண்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை குறைப்பதாக அறிவித்தது.

பிஎஸ்என்எல் அதிரடி: ஜியோவிற்கு எதிராய் ரூ.187-க்கு அன்லிமிடெட் டேட்டா!

இன்று அதனை சரிக்கட்டும் நோக்கில் பிஎஸ்என்எல் ரூ.187/- என்கிற கட்டணத் திட்டத்தில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன மாற்றம்.? அதன் நன்மைகள் என்ன.? இதெப்படி ஜியோவிற்கு எதிரான கட்டண யுத்தத்தின் கேள் இடம்பெறும் என்பதை விரிவாக காண்போம்.

இப்போது வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது.!

இப்போது வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது.!

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.187/- என்கிற கட்டணத் திட்டத்துடன் இப்போது வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது. இந்த திருத்தத்தின் வழியாக நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த திட்டங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் அமைதியாக இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்கனவே ஒரு எஸ்எம்எஸ் வழியாக அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

தீர்ந்துவீட்டால் கவலைப்படாதீர்கள்.!

தீர்ந்துவீட்டால் கவலைப்படாதீர்கள்.!

உடன் 1ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது மேலும் வெளிச்செல்லும் அழைப்புகள் உள்பட வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான நன்மையையும் வழங்குகிறது. ஒருவேளை செல்லுபடியாகும் தேதிக்கு முன்னர் 1ஜிபி என்கிற அதிவேக தரவு தீர்ந்துவீட்டால் கவலைப்படாதீர்கள்.

இணைய வரம்பு தீர்ந்த பின்னர் 40 கேபிபிஎஸ்.!

இணைய வரம்பு தீர்ந்த பின்னர் 40 கேபிபிஎஸ்.!

ஏனெனில் பிஎஸ்என்எல் இணைய வரம்பு தீர்ந்த பின்னர், அதன் வாடிக்கையாளர்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்திலான இணைய அணுகலை அனுமதிக்கிறது. அந்த வேகத்தில், நீங்கள் வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும். ஆனால், யூட்யூப் மற்றும் இதர உலாவல்களை எதிர்பார்க்க வேண்டாம். மேலும், 40 கேபிபிஎஸ்க்கு- பிறகு எந்த வரம்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- திட்டம்.!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- திட்டம்.!

மறுகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் ரூ.149/- என்கிற கட்டணத் திட்டத்தின் கீழ் வரம்பற்ற தரவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா வரம்பு முடிந்த பின்னர், இணைய வேகமானது 64 கேபிபிஎஸ் ஆக குறையும். 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டம் நாள் ஒன்றிற்கு 150எம்பி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

வரம்பற்ற ரோமிங் குரல் அழைப்பு

வரம்பற்ற ரோமிங் குரல் அழைப்பு

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம், இதே ரூ.187 திட்டத்தை திருத்தியமைத்து, அதன் நன்மைகளில் வரம்பற்ற ரோமிங் குரல் அழைப்புகளையும் சேர்த்தது என்பதும், ஜியோவின் ரூ.149/- திட்டத்தின் அடிப்படையில் தான் ரூ.187/- கட்டணத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Is Now Offering Unlimited Data With the Rs 187 Tariff Plan Countering Jio’s Rs 149 Plan; Sets After FUP Speed of 40 Kbps. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X