Home
News

BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..

BSNL நிறுவனம் நாட்டில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சமீபத்தில் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல், சில நம்ப முடியாத சலுகைகளையும் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இப்போது அதன் பயனர்களுக்கு 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் 5 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது என்று அறிவித்துள்ளது. ஆனால், இந்த இலவச 5 ஜிபி டேட்டாவை பெறப் பயனர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். BSNL நிறுவனம் வழங்கியுள்ள நிபந்தனைகளைச் செய்துவிட்டால் உங்களுக்கு 5 ஜிபி டேட்டா இலவசமாகக் கிடைக்கும்.

BSNL அறிமுகம் செய்துள்ள குறுகிய கால சலுகை

BSNL அறிமுகம் செய்துள்ள குறுகிய கால சலுகை

BSNL நிறுவனத்தின் அறிவிப்புப் படி, BSNL உடன் இனைந்திருக்கும் ஒவ்வொரு பயனரும் இந்த இலவச டேட்டாவைப் பெறத் தகுதியுடையவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. BSNL சிம்மிற்கு மாறும் புதிய பயனர்களுக்கு மட்டுமே அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து 5 GB இலவச டேட்டாவைப் பெறத் தகுதியானவர்களாகிறார்கள். மேலும், இந்த சலுகை ஜனவரி 15, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆம், BSNL அறிமுகம் செய்துள்ள இந்த சலுகை ஒரு கூறுகிற கால சலுகையாகும்.

யாருக்கெல்லாம் இந்த 5 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த 5 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்?

BSNL ஆனது '#switchtoBSNL' என்ற புதிய பிரச்சாரத்தை இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விளம்பர அறிவிப்பின் படி, நிறுவனம் இலவசமாக 5 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்ற செல்லுபடியாகும் காலத்துடன் வழங்குகிறது. அல்லது, இந்த இலவச 5 ஜிபி டேட்டா பயனர் தேர்வு செய்த தற்போதைய திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்துடன் செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், இந்த சலுகையை நிறுவனம் பிற நெட்வொர்க்குகளில் இருந்து வெளியேறி BSNL இல் சேரும் பயனர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை மட்டும் செய்தால் போதுமா? 5 ஜிபி இலவச டேட்டா கிடைக்குமா?

இதை மட்டும் செய்தால் போதுமா? 5 ஜிபி இலவச டேட்டா கிடைக்குமா?

BSNL இலிருந்து ஒரு புதிய எண்ணைப் பெறுவதால், இந்த 5 ஜிபி இலவச போனஸ் டேட்டாவிற்கு நீங்கள் தகுதி பெற முடியாது. கீழே உள்ள சலுகையின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றிய பின்னர் மட்டுமே இந்த சலுகையில் கீழ் கிடைக்கும் இலவச 5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று BSNL நிறுவனம் கூறியுள்ளது. உண்மையில் இது அவ்வளவு பெரிய சிக்கலான நிபந்தனைகள் அல்ல, BSNL குறித்து சில தகவல்களை நீங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட வேண்டும். அவ்வளவு தான், இதைச் செய்த பின்னர் நிறுவனம் உங்களுக்கான இலவச டேட்டாவை வழங்கும்.

#SwitchtoBSNL விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன சொல்கிறது?

#SwitchtoBSNL விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன சொல்கிறது?

முதலாவதாக, இந்த பிரச்சாரம் தொடர்பான ஒவ்வொரு பிஎஸ்என்எல் இடுகையையும் பயனர்கள் தங்கள் காலவரிசையில் பகிர்வது மற்றும் ரீட்வீட் செய்வது போன்ற செயல்களை கட்டாயம் செய்ய வேண்டும். இது 5 ஜிபி டேட்டாவை பெறக் கட்டாயமாகும். மேலும், பங்கேற்பாளர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ BSNL Facebook பக்கத்தையும் (@bsnlcorporate) டிவிட்டர் கைப்பிடியையும் (@BSNLcorporate) பின்தொடர வேண்டும். அதேபோல் இந்த அதிகாரப்பூர்வ பக்கங்களை லைக் செய்ய வேண்டும்.

#SwtichtoBSNL என்ற ஹேஷ்டேக் பயன்படுத்த வேண்டுமா?

#SwtichtoBSNL என்ற ஹேஷ்டேக் பயன்படுத்த வேண்டுமா?

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் தங்கள் உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கும் போது பயனர்கள் #switchtoBSNL என்ற டேக் ஐப் பயன்படுத்துவது கட்டாயமாகும். BSNL சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் #SwtichtoBSNL என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி BSNL சேவைக்கு அவர்கள் ஏன் மறுக்கிறார்கள் என்ற மாறுவதற்கான காரணத்தை இடுகையிட வேண்டும். பின்னர் BSNL ஐக் குறியிடவும் மற்றும் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் அதைப் பின்பற்ற வேண்டும். BSNL இல் சேரும் புதிய வாடிக்கையாளர்கள் ட்வீட் மற்றும் பேஸ்புக் போஸ்ட்டின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, அந்தந்த மொபைல் எண்ணுடன் DM அல்லது Whatsapp (9457086024) எண் மூலம் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.

BSNL நிறுவனம் தான் தீர்மானிக்குமா?

BSNL நிறுவனம் தான் தீர்மானிக்குமா?

இவை அனைத்தையும் செய்த பிறகு, வாடிக்கையாளர் நிறுவனத்திடமிருந்து 5 ஜிபி போனஸ் தரவைப் பெறத் தகுதியுடையவர் ஆவர். இந்த சலுகை ஜனவரி 15, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். போனஸ் தரவைப் பெற எந்தப் பயனர்கள் தகுதியானவர்கள் என்பதை BSNL நிறுவனம் தான் தீர்மானிக்கும் என்பதையும் நிறுவனம் அதன் விளம்பரத்துடன் குறிப்பிட்டுக் கூறியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த இலவச பயனைப் பெறப் பயனர்கள் தங்கள் எண்ணை தற்போதைய ஆபரேட்டரிலிருந்து BSNL சேவைக்கு போர்ட் செய்ய வேண்டும். அதாவது நெட்வொர்க் போர்ட்டபிலிட்டி செய்ய வேண்டும்.

425 நாட்கள் செல்லுபடியாகும் BSNL திட்டம்

425 நாட்கள் செல்லுபடியாகும் BSNL திட்டம்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இப்போது 425 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கூடிய ரீசார்ஜ் திட்டம் உட்பட நீண்ட கால திட்டங்களை வழங்குகிறது. இவ்வளவு நீண்ட கால வேலிடிட்டியை வழங்கும் வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. BSNL 425 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை ரூ. 2500 விலைக்கு வழங்குகிறது. இது போன்ற பல நீண்ட கால வேலிடிட்டி திட்டங்களை BSNL வழங்குகிறது. இப்போது BSNL பயனர்களாக செயல்பாட்டில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனை அளிக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Is Now Offering Free 5GB of Data for 30 Days Under Switch To BSNL Scheme : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X