நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா.. Elon Musk தலையில் இடியை இறக்கிய BSNL நிறுவனம்!
இந்தியாவிற்குள் நுழைந்துள்ள எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவைக்கு - அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. ஸ்டார்லிங்க் சேவைக்கான ஹார்ட்வேர் கட்டணம் ரூ.35,000 வரை செல்லும் என்கிற தகவல் வெளியாகி இந்திய கஸ்டமர்களை தெறிக்கவிட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் சேவைக்கு எதிராக பிஎஸ்என்எல் (BSNL) செய்து வரும் "சம்பவம்" குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சாட்காம் (Satcom) என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கைக்கோள் தொடர்பு (Satellite communications) துறையில், போட்டியாளர்களை விட, அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

எலான் மஸ்க்கின் (ElonMusk) ஸ்டார்லிங்க் (Stralink), பார்தி குழுமத்தால் (Bharti Group) ஆதரிக்கப்படும் யூடெல்சாப் ஒன்வெப் (Eutelsab OneWeb) மற்றும் ரிலையன்ஸ் (Reliance) ஆதரவின் கீழான ஜியோ-எஸ்இஎஸ் (Jio-SES) போன்ற நிறுவனங்கள் இன்னும் சேவைகளை தொடங்காத மறுகையில் பிஎஸ்என்எல் ஏற்கனவே அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.
ஆம்! பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏற்கனவே அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் மூலோபாய பயனர்களுக்கு செயற்கைக்கோள் இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனமானது , ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக ஏஜிஆர்-இல் (அதாவது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில்) 1% செலுத்துகிறது.
இந்த இடத்தில் - தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் 4% கட்டணம் வசூலிக்கும்படி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் டாட் (DoT) என்கிற தொலைத்தொடர்புத் துறையானது (Department of Telecommunications) இந்த பரிந்துரையை ஏற்காததால் இது திருத்தப்படலாம்.
அதாவது இந்த விஷயத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இருக்கும் ஒரு பெரிய நன்மை என்னவென்றால், அது மிக குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை (Spectrum) பெறும். ஆக அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் சாட்காம் சேவைகளை வழங்க முடியும்.
ஆனால் இப்போது வரையிலாக பிஎஸ்என்எல் டைரக்ட்-டூ-டிவைஸ் (Direct-to-device) சேவைகளை வழங்கவில்லை. இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே "நிறுவன சேவைகளை" வழங்குகிறது. பி2பி டொமைன் நாட்டில் பி2சி பிரிவில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
ஸ்டார்லிங்க், யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ-எஸ்இஎஸ் போன்ற நிறுவனங்கள் பிஎஸ்என்எல்-க்கு எப்படி வலுவான போட்டியை அளிக்கும், பதிலை பிஎஸ்என்எல் எப்படி சமாளிக்கும் என்பதை எல்லாம் பார்க்க சுவாரசியமாக இருக்கும் தான். அதற்கு முன் அரசாங்கத்திடமிருந்து ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்து இறுதி உறுதிப்படுத்தல் வர வேண்டும்; அதுவரை விஷயங்கள் முன்னேறாது.
ரூ.35,000 க்கு ஸ்டார்லிங்க் ஹார்ட்வேர்: ஸ்டார்லிங்க் சேவையின் வாடிக்கையாளர் வளாக உபகரணங்கள் (Customer premise equipment - CPE) ஆனது, அதாவது ஸ்டார்லிங்க் சேவையின் சாட்டிலைட் கான்ஸ்டலேஷன் உடன் இணைக்க தேவையான வன்பொருள் ஆனது ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை செலவாகும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் (India Ratings and Research) மதிப்பிடுகிறது.
ஸ்டார்லிங்க் சேவையின் மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.3,000 - 3,500 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது இந்தியாவில் உள்ள என்ட்ரி லெவல் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் விலைகளை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஸ்டார்லிங்க் சேவையானது மெயின் ஸ்ட்ரீம் கஸ்டமர்களுக்கானது அல்ல என்பதை வெளிப்படையாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அந்த வாய்ப்புகளை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி குழுமம் தட்டி பறிக்காமல் இருக்கும் வரை!


Click it and Unblock the Notifications








