Home
News

ஆஃபர் போட்டு அழைக்கும் Jio.. கொஞ்சம் பொறுங்க.. சென்னைக்கு வருது 4G.. மலிவு விலை.. BSNL அதிரடி..

ஜியோ (Jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களின் ப்ரீபெய்ட் கட்டணங்களின் விலை உயர்வுக்குப் பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிக மக்கள் இணைந்து வருகின்றனர். அதுவும் பிஎஸ்என்எல் (Bsnl) நாட்டில் சில முக்கிய இடங்களில் மட்டும் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. கூடிய விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் சென்னை முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. எனவே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது அந்நிறுவனம். அதாவது அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் போன்ற சில இடங்களில் இந்த சிம் கார்டுகளை மேம்படுத்த முடியும்.

ஆஃபர் போட்டு அழைக்கும் Jio.. சென்னைக்கு வருது 4G..  BSNL அதிரடி..

அதேசமயம் தற்போது 4ஜி சிம் காரடுகள் வைத்துள்ள மக்கள் தங்கள் சிம் கார்டுகளை மாற்றாமல் 4ஜி சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 19 கிராமங்களுக்கு 4ஜி சேவையை வழங்கி அதிரடி காட்டியுள்ளது. கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் புதிய போன், புதிய திட்டங்கள் மற்றும் சில ஆஃபர்களை வழங்கி வருகிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மக்கள் இணைந்து வருவதால் இதுபோன்ற பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் சற்று உயர்வான விலையில் தான் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஆஃபர் போட்டு அழைக்கும் Jio.. சென்னைக்கு வருது 4G..  BSNL அதிரடி..

விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்தால் இன்னும் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 prepaid recharge plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம். இதுதவிர ஜிங்க் (Zing), பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.

ஆஃபர் போட்டு அழைக்கும் Jio.. சென்னைக்கு வருது 4G..  BSNL அதிரடி..

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid recharge plan) ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர சில முக்கிய சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேசமயம் ஏர்டெல், ஜியோ நிறுவனத்திடம் இது போன்ற கம்மி விலை திட்டங்களை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL is going to launch 4G service in Chennai soon:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X