BSNL: ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை மட்டுமே இந்த சலுகை.. நன்மை அப்படியே முழுசா கிடைக்குமா?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர், ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை பயனர்களுக்குச் சிறப்புச் சலுகையை வழங்க உள்ளது. இந்தச் சலுகை ஒரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த காலத்திற்கு இடையில் பயனர் ரீசார்ஜ் செய்யும் டாக்டைம் திட்டத்தின் MRPக்கு சமமான முழு பயன்பாட்டு மதிப்பை வழங்குவதாக BSNL அறிவித்துள்ளது.

ஜூன் 24 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை மட்டும்
முன்பே சொன்னது போல், இந்த குறுகிய கால ஆஃபர் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும், இந்த திட்டத்தின் விலை ரூ.110 ஆகும். எனவே ஜூன் 24 முதல் ஜூன் 29 ஆம் தேதிக்குள் BSNL வழங்கும் ரூ.110 திட்டத்துடன் பயனர் ரீசார்ஜ் செய்தால், அவர்களுக்கு முழு உபயோக மதிப்பு ரூ.110 அப்படியே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கூட BSNL நிறுவனம் இதே போன்ற சலுகையை அறிவித்திருந்தது.

இதற்கு முன் கூட இப்படி சலுகையை BSNL அறிவித்ததா?
BSNL ஜூன் 11 மற்றும் ஜூன் 12 ஆம் தேதிக்கு இடையில் இதே சலுகையை அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஜூன் 18 மற்றும் ஜூன் 19 ஆம் தேதிக்கு இடையில் கூட வந்த சலுகையை இயக்கியது. பயனர்கள் இந்த திட்டத்தை இணைய போர்டல் அல்லது மொபைல் பயன்பாடு வழியாக ரீசார்ஜ் செய்யலாம். BSNL அதன் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற பலன்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்தில் வசிக்கும் நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். BSNL சென்னை சர்க்கிள் மற்றும் தமிழ்நாடு சர்க்கிலில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது இப்போது ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. இந்த சலுகை (இன்று), 24 ஆம் தேதி முதல் துவங்கி 29 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கிறது. இப்போது இந்த சலுகை BSNL இன் ஆன்லைன் போர்டல் வழியாகவும் BSNL ஆப்ஸ் வழியாகவும் கிடைக்கிறது.

ரூ.110 டாக்டைம் வவுச்சர் ரீசார்ஜ்
மற்ற வட்டங்களில் இந்த சலுகை வேறு எந்த திட்டத்தின் மீது கிடைக்கிறதா என்பதைத் தொலைத்தொடர்பு நிறுவனம் அதிக தெளிவுபடுத்தவில்லை. எதுவாக இருந்தாலும், நீங்கள் மக்களை அதிகம் அழைக்கும் நபராக இல்லாவிட்டால், இந்த ரூ.110 கொண்ட டாக்டைம் வவுச்சர் ரீசார்ஜ் செய்வதற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். BSNL திட்ட வவுச்சர்கள் இரண்டாம் நிலை சிம் பயனர்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.

இப்படி கூட ரீசார்ஜ் செய்யலாம் முழு நன்மை மிஸ் ஆகாது
இந்த டாக் டைம் திட்டங்கள் எல்லாம் நமக்கு செட் ஆகாது என்று கருதும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு, பயனர்கள் BSNL இன் நீண்ட கால திட்ட வவுச்சர்களை எடுத்து, மேலே குறிப்பிட்டுள்ள டாக்டைம் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்தலாம் என்பதை மறக்காதீர்கள். இந்த வழியில், செயலில் உள்ள சேவைகள் மற்றும் குரல் அழைப்பு இயக்கப்பட்டதன் மூலம் அவர்கள் பிஎஸ்என்எல் சிம்மை இரண்டாம் நிலை விருப்பமாக வைத்திருக்க முடியும்.

BSNL Selfcare மொபைல் ஆப்ஸ்
BSNL இது போன்ற பல திட்ட வவுச்சர்களை வழங்குகிறது. BSNL தொலைத்தொடர்பு இணையதளம் அல்லது மொபைல் ஆப்ஸ் சென்று இது பற்றிய விபரங்களைப் பார்க்கலாம். BSNL இன் Selfcare மொபைல் ஆப்ஸ் செயலியானது பயனர்கள் புரிந்துகொள்வதற்கும், செயல்பாட்டை இயக்க மிகவும் நன்றாகவும் மென்மையாகவும் உள்ளது. மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தச் சிக்கல் இருந்தால், வழக்கமான BSNL இணையதள பக்கத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications