சத்தமில்லாமல் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கு பிஎஸ்என்எல்-ன் பலே திட்டம்.! இது தெரியாம போச்சே

|

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்கள் கட்டணங்களை 40% வரை அதிகரிப்பதைக் கண்டோம், ஆனால் பிஎஸ்என்எல்இந்த அலைவரிசையில் சேரவில்லை.

பிஎஸ்என்எல் இல் அதிக டேட்டா பயன் எவ்வளவு?

பிஎஸ்என்எல் இல் அதிக டேட்டா பயன் எவ்வளவு?

பிஎஸ்என்எல் சில பயனர்களால் விரும்பப்படுவதற்கு மற்றொரு காரணம். மற்ற எல்லா தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் பெரும்பாலும் மாதத்திற்கு 2 ஜிபி, 3 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள், பிஎஸ்என்எல் தினசரி டேட்டா பயனை 5ஜிபி வரை வழங்குகிறது. அப்படியான ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை நாம் பார்க்கப்போகிறோம்.

5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

5 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் கனரக டேட்டா பயனர்களுக்கென்று அறிமுகம் செய்யப்பட்ட ப்ரீபெய்ட் திட்டம் தான் ரூ.548 பிஆர்பிஎஸ்டிவி திட்டம். பெயரிலிருந்து நீங்கள் யூகிக்கக்கூடியபடி, இந்த திட்டம் பிஎஸ்என்எல் இன் சிறப்புக் கட்டண வவுச்சர் எஸ்.டி.வி ஆகும். இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

தினமும் வழங்கப்படும் 5 ஜிபி டேட்டா

தினமும் வழங்கப்படும் 5 ஜிபி டேட்டா

இந்த எஸ்.டி.வியின் திட்டத்தின்படி சந்தாதாரர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் வழங்கப்படும் 5 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 80 கி.பி.பி.எஸ் வரை குறைக்கப்படும். இருப்பினும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் எந்த அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுவதில்லை என்பதைச் சந்தாதாரர்கள் கவனிக்க வேண்டும்.

வரம்பற்ற டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

வரம்பற்ற டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல்லில் இருந்து மற்றொரு தனித்துவமான திட்டம் என்றால் அது ரூ.1,098 ப்ரீபெய்ட் திட்டம் தான். இத்திட்டத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால், எந்த ஒரு தினசரி டேட்டா வரம்புடனும் வரவில்லை என்பது தான். வரம்பற்ற டேட்டா நன்மையை விரும்பும் பயனர்கள் கண்டிப்பாக இந்த திட்டத்தை கருத்தில் கொள்ளலாம்.

காத்திருந்தது போதும் இதோ அறிமுகமானது Samsung Galaxy A51: குவியும் வரவேற்புகள்- அப்படி என்ன சிறப்பு?காத்திருந்தது போதும் இதோ அறிமுகமானது Samsung Galaxy A51: குவியும் வரவேற்புகள்- அப்படி என்ன சிறப்பு?

கூடுதல் நன்மையையும் இத்திட்டத்தில் இருக்கிறது

கூடுதல் நன்மையையும் இத்திட்டத்தில் இருக்கிறது

இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, முழு செல்லுபடியாகும் காலகட்டத்தில் மொத்தம் 375 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்தத் திட்டம் வரம்பற்ற அழைப்பையும், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்-களையும் வழங்குகிறது.

3 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

3 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல்லில் இருந்து 3 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.78 விலையில் கிடைக்கிறது. ​இந்த திட்டம் 8 நாட்களுக்கு மிகக் குறைந்த செல்லுபடியாகும். இந்த செல்லுபடியாகும் காலகட்டத்தில், ரூ.78 டேட்டா எஸ்.டி.வி.யின் பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

கூடுதல் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் நம்மை

கூடுதல் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் நம்மை

தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் காலிங்மற்றும் 250 நிமிட வீடியோ காலிங் அழைப்பையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவையையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. அதிக டேட்டா பயன்னுடன் கூடுதல் நமைகளும்வேண்டும் என்று விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல திட்டமே.

Best Mobiles in India

English summary
BSNL Is Giving 5 GB of Data Everyday So This Is The Perfect Prepaid Plan For You : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X