சத்தமில்லாமல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்த பிஎஸ்என்எல்.!

|

பிஎஸ்என்எல் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்த மலிவு விலை பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் ஆண்டு சந்தா கட்டண விருப்பத்தை வழங்கத் தொடங்கியது.

பாரத் ஃபைபர் ரூ.449

வெளிவந்த தகவலின்படி, பாரத் ஃபைபர் ரூ.449 திட்டத்தை தவிர, மீதமுள்ள நான்கு திட்டங்களான ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும்ரூ.1,499 ஆகியவைகளை இப்போது ஒரு வருட கால சந்தாவின் கீழ் ரீசார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வருடத்திற்கு தேர்வு செயயலாம்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த திட்டங்கள், மாதாந்திர அடிப்படையிலேயே அணுக கிடைத்தன. இப்போது பயனர்கள் இந்த திட்டங்களை ஒரு வருடத்திற்கு தேர்வு செயயலாம்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?பிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா?

13 மாதங்களுக்கான சேவை அணுக கிடைக்கும்.

அதேபோல் பயனர்கள் இந்த ஒரு வருட திட்டங்களைத் தேர்வு செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு கூடுதலாக 1 மாத கால
சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், அடுத்த12 மாதங்களுக்கு ரீசார்ஜை செய்தால் மொத்தம் 13 மாதங்களுக்கான சேவை அணுக கிடைக்கும்.

 ஒரு வருட சந்தாவை வழங்கும் 4 பாரத் ஃபைபர் திட்டங்களின் நன்மைகள்

ஒரு வருட சந்தாவை வழங்கும் 4 பாரத் ஃபைபர் திட்டங்களின் நன்மைகள்

ஃபைபர் பேசிக் பிளஸ், ஃபைபர் வேல்யூ, ஃபைபர் பிரீமியம், ஃபைபர் அல்ட்ரா ஆகிய நான்கு பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களும் இப்போது ஒரு வருட சந்தாவை வழங்குகின்றன. மேலும் இவைகளின் மதிப்பு முறையே ரூ.599, ரூ.799, ரூ.999, மற்றும் ரூ.1499 ஆகும்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி,பிஎஸ்என்எல் ரூ.449 ஃபைபர் பேசிக் திட்டத்திற்கான வருடாந்திர சந்தா விருப்பம்அறிமுகப்படுத்தவில்லை. அதேபோல் இந்த நான்கு வருடாந்திர திட்டங்களை தேர்வு செய்யும் மக்களுக்கு ஒரு மாத காலஇலவச சேவை அணுக கிடைக்கும். மேலும் இந்த புதிய மாற்றங்கள் பிஎஸ்என்எல் குறிப்பிட்ட திட்டங்களை வழங்கும்அனைத்து நகரங்களிலும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 தெரியாதவர்களுக்கு,

மேலும் இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு, பிஎஸ்என்எல்-இன் நீண்ட கால பிராட்பேண்ட் திட்டங்களானது 5.5 மாதங்கள் வரையிலான இலவச சேவையை வழங்குகிறது. அதாவது 10.5 மாதங்கள், 20.5 மாதங்கள் மற்றும் 30.5 மாதங்களுக்கான சந்தாக்களை தேர்வு செய்யும் பயனர்கள் 1.5 மாதங்கள், 3.5 மாதங்கள் மற்றும் 5.5 மாதங்கள் இலவச சேவைக்கான தகுதியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதில் ரூ.499 திட்டமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனாலும் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு திட்டங்களுக்கான அதிகபட்ச சந்தா காலம் 12 மாதங்கள் ஆகும். நினைவூட்டும் வண்ணம் பிஎஸ்என்எல் இந்த திட்டங்களை கடந்த அக்டோபர் 1, 2020 அன்று விளம்பர அடிப்படையில் 90 நாட்களுக்கு அறிமுகம் செய்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்த திட்டங்களின் கிடைக்கும் தன்மை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.499 திட்டமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ரூ.599 பாரத் ஃபைபர் திட்டமானது 60 எம்.பி.பி.எஸ் வேகத்தையும்

மேலும் பிஎஸ்என்எல் ரூ.599 பாரத் ஃபைபர் திட்டமானது 60 எம்.பி.பி.எஸ் வேகத்தையும், ரூ.799 திட்டம்100 எம்.பி.பி.எஸ் வேகத்தையும் வழங்குகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.999 பாரத் ஃபைபர் திட்டமானது200 எம்.பி.பி.எஸ் வேகத்தையும், ரூ.1499 திட்டமானது 300 எம்.பி.பி.எஸ் வேகத்தையும் வழங்குகிறது.

ரூ.449 பாரத் ஃபைபர் பேசிக் திட்டத்தை தான்

ஆனாலும் ரூ.449 பாரத் ஃபைபர் பேசிக் திட்டத்தை தான் மக்கள் அதிகமாக தேர்வுசெய்கின்றனர், இதன் வேகம்வேகம் 30 எம்.பி.பி.எஸ் ஆகும் மற்றும் இது 3.3 டி.பி என்கிற எஃப்யூபி டேட்டா வரம்புடன் வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL is bringing annual subscription option for Bharat Fiber plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X