பிஎஸ்என்எல் இலவசமாக வழங்கும் 5ஜிபி டேட்டா: காரணம் இதுதான்-Work @ Home.!

|

பிராட்பேண்ட் சேவையில் மற்ற ஆபரேட்டர் நிறுவனங்களை விட அரசு நடத்தும் பிஎஸ்என்எல் எப்போதும் ஒருபடி முன்னிலையிலிருந்து பல சலுகைகளை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதிகமான பயனர்களை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் BSNL நிறுவனம், ISP Work @ Home என்ற புதிய பிராட்பேண்ட் திட்டத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய Work @ Home திட்டம்

புதிய Work @ Home திட்டம்

எது இலவசமாக பிராட்பேண்ட் சேவையா என்று நீங்கள் சந்தேகமாகப் பார்க்காதீர்கள், உண்மையிலேயே பி.எஸ்.என்.எல் இன் இந்த Work @ Home இலவசமாகத் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிறிய சூட்சம முடிச்சையும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் போட்டுவைத்துள்ளது. இந்த புதிய Work @ Home இணைப்பு அனைத்து பி.எஸ்.என்.எல் வட்டங்களிலும், அந்தமான் & நிக்கோபார் உட்பட எல்லா வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது இருந்தால் மட்டுமே இலவசமாக 5 ஜிபி டேட்டா

இது இருந்தால் மட்டுமே இலவசமாக 5 ஜிபி டேட்டா

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த இலவச பிராட்பேண்ட் சந்தா உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களிடம் பிஎஸ்என்எல்லின் லேண்ட்லைன் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் வைத்துள்ள தற்போதுள்ள பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Work @ Home திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

Work @ Home திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

இந்த Work @ Home திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டா 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இத்திட்டத்தின் கீழ் 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, 5 ஜிபி தினசரி வரம்பிற்குப் பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு FUP வரம்பும் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு BSNL வலைத்தளத்தை அணுகுங்கள்.

குறைவான வேகம்

குறைவான வேகம்

இந்த இலவசத் திட்டத்தில் FUP வரம்பு இல்லை என்பது நன்மையாகப் பார்க்கப்பட்டாலும், இத்திட்டத்தின் கீழ் நிறுவனம் வழங்கும் டேட்டா வேகம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்பதே உண்மை. பயனர்களுக்கு 10 எம்.பி.பி.எஸ் வேகம் என்பது மிகவும் குறைவான வேகம் தான் என்று கருதப்படுகிறது.

Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?

கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை

கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை

இருப்பினும் கூட, நிறுவனம் இந்த திட்டத்தை இலவசமாக வழங்கி வருகிறது, மேலும் குறிப்பாக இந்த திட்டத்திற்கு எந்தவொரு நிறுவலும் கட்டணமோ அல்லது மாதாந்திர கட்டணமோ அல்லது பாதுகாப்பு கட்டணமோ அல்லது வைப்புத்தொகையோ எதுவும் நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

இருப்பினும், பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே Work @ Home திட்டம் கிடைக்கும்படி செய்துள்ளது. அடிப்படையில் பிஎஸ்என்எல் தற்போதுள்ள லேண்ட்லைன் பயனர்களை பிராட்பேண்ட் சந்தாதாரர்களாக மாற்றி இலவச நன்மைகளையா அனுபவிக்க வழிவகுக்கிறது.

இலவசமாக கிடைக்கும் பிராட்பேண்ட் சேவை

இலவசமாக கிடைக்கும் பிராட்பேண்ட் சேவை

குரல் அழைப்பைப் பொறுத்தவரை, எப்போதும் போல இலவசம் தான், லேண்ட்லைன் திட்டத்திற்குப் பயனர்கள் செலுத்தும் கட்டணத்துடன் பிராட்பேண்ட் சலுகைகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Introduces Work From Home Broadband Plans With 5 GB Data At Free Cost : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X