ரூ.10/- முதல் 160ஜிபி டேட்டா வரை; பிஎஸ்என்எல் அதிரடி; ஜியோவிற்கு சரியான பதிலடி.!

|

மிகவும் பிரபலமான "குருநாதா.. இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா" என்கிற நடிகர் வடிவேலுவின் சினிமா வசனம் ஞாபகம் இருக்கிறதா.? இந்த இடத்தில் நடிகர் வடிவேலுக்கு பதிலாக பிஎஸ்என்எல்-ஐ நினைத்துக் கொள்ளுங்கள். கண்மூடித்தனமாக கட்டண திட்டங்கள் மூலம் தாக்குவது ரிலையன்ஸ் ஜியோ என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ரூ.10 முதல் 160ஜிபி டேட்டா வரை; பிஎஸ்என்எல் அதிரடி; ஜியோவிற்கு பதிலடி!

அதுதான் தற்போதைய இந்தியா டெலிகாம் துரையின் நிலை. கெத்தாக உள்வந்து அடிவாங்கிச்செல்லும் சோ கால்ட் "குருநாதர்" வேறு யாருமில்லை - ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் தான். ஜியோவின் தாக்குதல்களை சமாளிக்க முடியாத அரசு நடத்தும் தொலைத் தொடர்பு இயக்குனரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது அதன் 4ஜி பிளஸ் கட்டணத் திட்டங்களை மறுசீரமைத்து அறிவித்துள்ளது.

மூன்று புதிய 4ஜி ப்ளஸ் வைஃபை திட்டம்

மூன்று புதிய 4ஜி ப்ளஸ் வைஃபை திட்டம்

இது பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய பிஎஸ்என்எல் வைஃபை ஹாட்ஸ்பாட்டுடன் வாடிக்கையாளர்களை இணைக்க அனுமதிக்கும் திட்டமாகும். இந்த திருத்தங்களுடன் சேர்த்து பிஎஸ்என்எல் அதன் மூன்று புதிய 4ஜி ப்ளஸ் வைஃபை திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

நுழைவு நிலை

நுழைவு நிலை

எதிர்பார்த்தபடியே திருத்தப்பட்ட திட்டங்களானது இப்போது முன்பை விட சிறந்த தரவு நன்மைகளை வழங்குகின்றன. இப்போது பிஎஸ்என்எல் 4ஜி ப்ளஸ் வைஃபை திட்டமானது ரூ.10/- தொடங்கி ரூ.1,999/- வரை நீள்கிறது. தரவு பயன்பாட்டை பொறுத்தமட்டில் 300எம்பி என்கிற நுழைவு நிலை திட்டம் தொடங்கி 150ஜிபி வரையிலான டேட்டாவை அதன் பிரீமியம் திட்டம் மூலம் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் வைஃபை 50, 90, 500

பிஎஸ்என்எல் வைஃபை 50, 90, 500

அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.50/-க்கு பிஎஸ்என்எல் வைஃபை 50 திட்டமும், ரூ.90/-க்கு பிஎஸ்என்எல் வைஃபை 90 திட்டமும் மற்றும் ரூ.500/-க்கு பிஎஸ்என்எல் வைஃபை 500 திட்டமும் வெளியாகியுள்ளது.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

ரூ.50/- திட்டமானது மொத்தம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் மொத்தம் 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்க, ரூ.90/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் மொத்தம் 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இறுதியாக ரூ.500/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் மொத்தம் 30 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

ரூ.20, ரூ.30, ரூ.40, ரூ.60, ரூ.75, ரூ.80 ரூ.100

ரூ.20, ரூ.30, ரூ.40, ரூ.60, ரூ.75, ரூ.80 ரூ.100

மேற்குறிப்பிட்டபடி, நிறுவனத்தின் 4ஜி ப்ளஸ் வைஃபை திட்டமானது 10 ரூபாய்க்கு ஆரம்பிக்கிறது. இதுவொரு அடிப்படை திட்டமாகும் மற்றும் ஒரு நாள் செல்லுபடியாகும் வண்ணம் 300எம்பி அளவிலான தரவை வழங்கும். இதனை தொடர்ந்து ரூ.20, ரூ.30, ரூ.40, ரூ.60, ரூ.75, ரூ.80 ரூ.100/- ஆகிய திட்டங்களானது ரூ.100/-க்குள் திட்டங்களாக கிடைக்கின்றது.

Oppo F5 Sidharth Limited Edition Unboxing (TAMIL)
1ஜிபி மற்றும் 1.5ஜிபி

1ஜிபி மற்றும் 1.5ஜிபி

ரூ.20/- திட்டமானது மொத்தம் மூன்று நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் மொத்தம் 500எம்பி அளவிலான டேட்டாவையுயும், மறுகையில் உள்ள ரூ.30 மற்றும் ரூ.40/- ஆகிய திட்டங்களானது முறையே 1ஜிபி மற்றும் 1.5ஜிபி அளவிலான தரவை மொத்தம் 14 நாட்களுக்கு வழங்குகிறது.

1ஜிபி, 2ஜிபி, 2ஜிபி, 1.5ஜிபி மற்றும்  2ஜிபி

1ஜிபி, 2ஜிபி, 2ஜிபி, 1.5ஜிபி மற்றும் 2ஜிபி

ரூ.40, ரூ.60, ரூ.75, ரூ.80/- மற்றும் ரூ.100/- ஆகிய திட்டங்களானது முறையே 1ஜிபி, 2ஜிபி, 2ஜிபி, 1.5ஜிபி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டாவை முறையே 14 நாட்கள், 7 நாட்கள், 14 நாட்கள், 30 நாட்கள் மற்றும் நாட்களுக்கு வழங்குகிறது.

4ஜிபி, 6ஜிபி, 12ஜிபி மற்றும்  24ஜிபி

4ஜிபி, 6ஜிபி, 12ஜிபி மற்றும் 24ஜிபி

அதற்கு அடுத்தபடியாக ரூ.180, ரூ.240, ரூ.349/- மற்றும் ரூ.599/- ஆகிய திட்டங்களானது முறையே 4ஜிபி, 6ஜிபி, 12ஜிபி மற்றும் 24ஜிபி அளவிலான டேட்டாவை முறையே 15 நாட்கள், 30 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 30 நாட்களுக்கு வழங்குகிறது.

75ஜிபி, 160ஜிபி

75ஜிபி, 160ஜிபி

பிரீமியம் திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.999, ரூ.1,999/- ஆகிய இரு திட்டங்கள் கிடைக்கின்றது. ரூ.999/- என்கிற 4ஜி ப்ளஸ் வைஃபை திட்டமானது இப்போது 75ஜிபி அளவிலான டேட்டாவை வழங்க மறுகையில் உள்ள ரூ.1999/- திட்டமானது 160ஜிபி அளவிலான தரவை கொடுக்கிறது. இந்த இரண்டு திட்டங்களுமே ரீசார்ஜ் செய்த தேதி முதல் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட்

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட்

பிஎஸ்என்எல் நிறுவனமானது தற்போது நாடெங்கிலும் அதன் 4ஜி ப்ளஸ் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை சேர்க்கும் பணிகளில் தீவீரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பிஎஸ்என்எல் 4ஜி ப்ளஸ் வைஃபை வவுச்சர்கள் ஆனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் ஆகிய இரு பயனர்களுக்கும் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் பிராட்ஃபை

பிஎஸ்என்எல் பிராட்ஃபை

இருப்பினும் நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் பிராட்ஃபை திட்டத்தின் கீழ் இன்னும் சிறப்பான நன்மைகள் கிடைக்கிறது. இது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் தரவுகளை அனுபவிக்க அனுமதிக்கிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

பதறிப்போன பிஎஸ்என்எல்: 8 திட்டங்களின் அதிரடி திருத்தம்.!

பதறிப்போன பிஎஸ்என்எல்: 8 திட்டங்களின் அதிரடி திருத்தம்.!

தனியார் தொலைதொடர்பு இயக்குனர்களை தொடர்ந்து பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனமும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான கட்டண யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்ந்து அதன் 3ஜி ப்ரீபெய்ட் தரவு ரீசார்ஜ் திட்டங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை நிகழ்த்திய வண்ணம் உள்ளது. அதாவது சில இணையத் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கவும் மற்றும் டேட்டா நன்மைகளை அதிகரித்தும் ஏற்கனவே இருக்கும் பயனர்களை, புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதிகபட்சமாக 120 நாட்கள் வரை
அதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 8 கட்டண திட்டங்களின் நன்மைகளை திருத்தியுள்ளது. குறைந்தப்பட்சம் 25 நாட்கள் மற்றும் அதிகபட்சமாக 120 நாட்கள் வரை செல்லுபடியாகும் திருத்தப்பட்ட 8 திட்டங்களின் நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

பிஎஸ்என்எல் 109

பிஎஸ்என்எல் 109

இந்த ரூ.109/- தரவு ரீசார்ஜ் வூச்சர் ஆனது மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 1536 எம்பி அளவிலான 3ஜி இணைய தரவை வழங்குகிறது. மேலும் இதன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக இலவச பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (PRBT) சேவையையும் வழங்கும். இருப்பினும், இந்த வாய்ப்பை கிழக்கு மண்டலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் 198

பிஎஸ்என்எல் 198

இந்த பிஎஸ்என்எல் ரூ.198/- தரவு ரீசார்ஜ் திட்டமானது 1 ஜிபி தினசரி தரவுப் பயன்பாட்டுடன் வருகிறது. மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 291

பிஎஸ்என்எல் 291

இந்த ரூ. 291/- தரவு திட்டமானது நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான இணைய பயன்பாட்டை வழங்குகிறது மற்றும் 25 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த டேட்டா பேக் ஆனது இலவச பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 333

பிஎஸ்என்எல் 333

நிறுவனத்தின் ட்ரிபிள் ஏஸ் திட்டம் என்று அழைக்கப்படும் ரூ.333/- என்கிற திட்டமானது வரம்பற்ற இணைய பயன்பாடு மற்றும் இலவச ரிங்டோன் சேவையுடன் வருகிறது. இந்த தரவுத் திட்டம் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி அளவிலான அதிவேக இணையத் தரவை வழங்குகிறது. அந்த வரம்பிற்கு பின்னனர் 80கேபிபிஎஸ் வேகத்திலான டேட்டாவை அனுபவிக்கலாம். மொத்தம் 41 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானதும் இலவச பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 444

பிஎஸ்என்எல் 444

நிறுவனத்தின் சௌகா எஸ்டிவி என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் ரூ.444/- என்கிற டேட்டா ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற இணைய தரவை 60 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி அதிவேக இண்டர்நெட் வரம்பை கொண்டுள்ளது. அதற்கு பின்னர் வேகம் 80கேபிபிஎஸ் என குறையும்.

பிஎஸ்என்எல் 549

பிஎஸ்என்எல் 549

நிறுவனத்தின் ரூ.549/- என்கிற தரவு ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான அதிவேக இணைய தரவு பயன்பாட்டை வழங்குகிறது. உடன் இந்த டேட்டா பேக் ஆனது இலவச பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 561

பிஎஸ்என்எல் 561

ரூ.561/- என்கிற தரவு ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த தரவு திட்டம் 80 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை கொண்டுள்ளது மற்றும் இதன் திட்டம் அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக இலவச பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (PRBT) சேவையையும் வழங்கும். நீண்ட கால டேட்டா நன்மையை வழங்கும் திட்டத்தை தேடும் மக்களுக்கு இதுவொரு சிறப்பான தேர்வாகும்

 பிஎஸ்என்எல் 821

பிஎஸ்என்எல் 821

இந்த ரூ.821/- ஆனது நிறுவனத்தின் மற்றொரு நீண்ட கால திட்டமாகும். நீண்டகால டேட்டா பில்கள் பற்றி கவலைப்படும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டம் மொத்தம் 120 நாட்களுக்கு செல்லுபடியாகும் வானம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
BSNL Introduces Three New 4G Plus WiFi Plans, Revises Existing Plans With Better Data Benefit. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X