பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ரூ.49-திட்டம் அறிமுகம்: என்னென்ன சலுகைகள்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தரமான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. மேலும் கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது இந்த பிஸ்என்எல் நிறுவனம்.

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்

ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கனிசமாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்.டி.வி -49 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்.டி.வி-49

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்.டி.வி-49 திட்டம் ஆனது செப்டம்பர் 1, 2020 முதல் நிறுவனத்தின் ரீசார்ஜ்பட்டியலுக்குள் வந்தது. மேலும் இந்த திட்டம் சரியாக 90நாட்களுக்கு மட்டுமெ ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு அட்டகாசமானவிளம்பர திட்டமாகும்.

Vodafone-Idea: ரூ.299 விலையில் 112 ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இதுதான் உங்களுக்கான சிறந்த திட்டம்!Vodafone-Idea: ரூ.299 விலையில் 112 ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இதுதான் உங்களுக்கான சிறந்த திட்டம்!

நன்மையை வழங்குகிறது. இந்த

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்.டி.வி 49 திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த எஸ்.டி.வி-யின்விலை ரூ.49 மட்டுமே என்பதால் நீங்கள் இலவசமாக பெறப் போகும் மொத்த டேட்டாவும் வெறும் 2ஜிபி மட்டுமே என்பது
குறிப்பிடத்தக்கது.

ரூ.49 திட்டத்தின் டேட்டா நன்மைகளை

பின்பு இந்த ரூ.49 திட்டத்தின் டேட்டா நன்மைகளை தவிர்த்து வாடிக்கையாளர்கள் 100 நிமிட இலவச அழைப்பு நன்மைகளையும் பெறுவார்கள். பின்பு குறிப்பிட்ட வரம்பு முடிந்த பின்னர்,நிகழ்த்தப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் டேட்டா மற்றும் வாய்ஸ் அழைப்புகளுடன் சேர்த்து, மொத்தம் 100இலவச எஸ்எம்எஸ் நன்மைகளும்
இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அறிமுகம் செய்த இந்த எஸ்.டி.வி 49

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த இந்த எஸ்.டி.வி 49 திட்டமானது மொத்தம் 28நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இது குறுகிய கால திட்டத்தை விரும்பும் மக்களுக்கு நல்லது ஏற்றது என்றே கூறலாம். குறிப்பாக எஸ்.டி.வி 49 திட்டத்திற்கான Selfcare Keyword ஆனது STV COMBO49 ஆகும்.

 டேட்டாக்களுக்காக தங்கள் ஸ்மார்ட்போன்

பின்பு டேட்டாக்களுக்காக தங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தாத ஆனால் அழைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அட்டகாச திட்டம் சிறந்தது. மேலும் நிமிடத்திற்கு 45பைசா என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் கூட இது 28நாட்டகள் வேலிடிட்டி கொண்டு வெளிவந்துள்ளது என்பது வெளிப்படை,அதனுடன் 100நிமிட இலவச அழைப்பும் வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் கிடைக்கும் தரமான அம்சங்கள்.! என்னென்ன?ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் கிடைக்கும் தரமான அம்சங்கள்.! என்னென்ன?

 சிம் கார்டை செயலில் வைத்திருக்க

குறிப்பாக சிம் கார்டை செயலில் வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் கண்டிப்பாக உதவும். கண்டிப்பாக அவசர காலங்களில் அழைப்புகளை மேற்கொள்ள இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். இதே போல் ரூ.100, ரூ.94, ரூ.95 போன்ற திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம், இதுவும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Bsnl Introduces Stv 49 Recharge Plan with 100 Minutes of Free Voice Calling For 28 Days: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X