பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்: என்னென்ன நன்மைகள்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது, இதன் காரணமாக கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது இந்நிறுவனம். மேலும் வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அதிகளவு வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதேசமயம் ஜியோ நிறுவனமும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பி.வி-1499-என்கிற புத்தம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இதைப் பற்றி முழுவிவரங்களைப் பார்ப்போம்.

குறிப்பாக பிஎஸ்எஸ்எல் நிறுவனம் அதன் சென்னை ட்விட்டர் கணக்கு வழியாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி புதிய பி.வி-1499 திட்டமானது செப்டம்பர் 1 2020 முதல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய பி.வி-1499 திட்டம் ஆனது பயனர்களுக்கு மொத்தம் 24ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவுடன் வருகிறது, மேலும் இதன் நன்மைகளை தவிரித்து, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த திட்டத்தின் குரல் அழைப்பு நன்மையானது ஒவ்வொரு நாளும் 250நிமிடங்களுக்கு என்கிற FUP வரம்பைக் கொண்டுள்ளது. அதன்பிறகு, வாடிக்கையாளர் குரல் அழைப்புகளைச் செய்வதற்கு நிலையான கட்டணத்தின் கீழ் செலவீனங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் இந்த திட்டம் ஒரு விளம்பர சலுகையாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால்,இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்90நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதல் செல்லுபடியை பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சுருக்கமாக இந்த பி.வி-1499-திட்டம் ஆனது 365 நாட்கள் என்ற செல்லுபடியை கொண்டுள்ளது, அதுவே விளம்பர சலுகையுடன் இந்த திட்டத்தின் அசல் செல்லுபடியாகும் தன்மை 30நாட்கள் நீட்டிக்கப்படும். எனவே திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் தன்மை 395 நாட்களாக மாறும் என்று எதிர்பார்க்க்படுகிறது.

பயனர்கள் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் வலைதளத்திலிருந்தும் பெறமுடியும் அல்லது பதிவுசெய்யப்பட்ட பிஎஸ்என்எல் எண்ணிலிருந்து ‘PLAN BSNL1499'என்கிற மெசேஜை 123 என்கிற எண்ணுக்கு அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ரூ.1499-என்கிற திட்டம் வேண்டாம் என்று நினைப்பவர்கள், பிஎஸ்என்எல்-ன் பி.வி -365 திட்டத்தை கருத்தில் கொள்ளலாம். இது 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, டேட்டா தீர்ந்த பிறகு 80 கே.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் இணைய சேவை, தினமும் 250 நிமிட வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கவனிக்க வேண்டி விஷயம் என்னவென்றால், மேலே கூறப்பட்டுள்ள அனைத்து இலவசங்களும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். எனவே முதல் 60 நாட்கள் கிடைக்கும் இலவச சேவையின் பின்னர்இ அழைப்புகளைச் செய்ய அல்லது டேட்டா பயன்படுத்த, வாடிக்கையாளர் மற்ற வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications