மலிவான விலையில் இலவச வரம்பற்ற ரோமிங் ரீசார்ஜை அறிவித்த பிஎஸ்என்எல்.!

|

அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் சென்னையில் (இது தமிழ்நாடு முழுவதும் பொருந்தும்) அதன் புதிய நுழைவு-நிலை ரோமிங் கட்டணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மலிவான விலையில் இலவச வரம்பற்ற ரோமிங் ரீசார்ஜை அறிவித்த பிஎஸ்என்எல்.!

இந்த பிராந்தியத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.186 அல்லது ரூ.485 அல்லது ரூ.666/- என்கிற காம்போ திட்டங்களுடன் இந்த கட்டண ரோமிங் ரீசார்ஜை பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.45/- மதிப்புள்ள இந்த ரோமிங் காம்போ வவுச்சரின் நன்மைகளை விரிவாக காண்போம்.

இலவச வரம்பற்ற ரோமிங்

இலவச வரம்பற்ற ரோமிங்

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரோமிங் திட்டமான ரூ.45/- ஆனது, பிஎஸ்என்எல் சேவை இல்லாத வட்டங்களான மும்பை மற்றும் தில்லி ஆகியவற்றில் இலவச வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.45/- வழியாக

ரூ.45/- வழியாக

ஆக தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்க முடியாத பிஎஸ்என்எல் திட்டங்களான ரூ.186, ரூ.485 மற்றும் ரூ.666/- ஆகியவைகள் இப்போது ரூ.45/- வழியாக அந்த நன்மைகளை வழங்கும் என்று அர்த்தம்.

மூன்று கட்டணத் திட்டங்களில் ஒன்று

மூன்று கட்டணத் திட்டங்களில் ஒன்று

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கட்டணத் திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர் புதிய ரூ.45/- ரோமிங் காம்போ வவுச்சரை ரீசார்ஜ் செய்யவதின் மூலம் மும்பை மற்றும் தில்லியில் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ரூ.10/- டால்க் டைம்

ரூ.10/- டால்க் டைம்

இந்த ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் மேலும் இது பிரதான பேலன்சில் ரூ.10/- என்கிற டால்க் டைம் வழங்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிடுகிறது. அறியாதோர்களுக்கு, தில்லி மற்றும் மும்பை வட்டங்களில் அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனம் அதன் சேவைகளை வழங்கி வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

வாபஸ்

வாபஸ்

இந்த காம்போ வவுச்சர் அறிமுகத்தின் விளைவாக பிஎஸ்என்எல் வழங்கி வந்த வீக்லி காம்போ வவுச்சர்களான ரூ.81, ரூ.148 மற்றும் ரூ.62/- ஆகியவைகள் அதே வட்டத்தில் உடனடியாக திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது என்பதும், இந்த மாற்றங்கள் டிசம்பர் 23, 2017 முதல் செயல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Introduces Roaming Combo Voucher of Rs 45 With Free Unlimited Voice Calling to Mumbai and Delhi Circles. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X