பிஎஸ்என்எல்-ன் "உண்மையான அன்லிமிடெட்" திட்டமான ரூ.39/- அறிமுகம்.!
இந்த ரூ.39/- திட்டத்தின் அறிமுகத்தின் விளைவாக இந்தியா முழுவதிலும் "உண்மையான" வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் பிஎஸ்என்எல் இணைந்துள்ளது.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் (பிஎஸ்என்எல்), சமீப காலமாக பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின்கீழ், பல பகுதிகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை வழங்கினாலும் கூட, புது தில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் (அரசுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான எம்டிஎன்எல் செயல்படும் காரணத்தினால் ) அதன் சேவையை வாங்காமலேயே இருந்தது.

அதனாலேயே பெரும்பாலான பிஎஸ்என்எல் காம்போ திட்டங்கள் ஆனது மும்பை மற்றும் தில்லி பயனர்களுக்கு குரல் அழைப்பு சலுகைகளை வழங்குவதில்லை. அந்த குறையை தீர்க்கும் வண்ணம், டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவச ரோமிங் குரல் அழைப்புகளை வழங்கும் ரூ.39/- என்கிற திட்டத்தை, பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ரூ.39/- திட்டத்தின் அறிமுகத்தின் விளைவாக இந்தியா முழுவதிலும் "உண்மையான" வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் பிஎஸ்என்எல் இணைந்துள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வழங்கும். கேரளா வட்டத்தில் இதே திட்டத்தின் விலை ரூ.41/- ஆக உள்ளது. ரூ.39/- திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.10/- டால்க் டைம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இதர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் : ரூ.186, ரூ.446, ரூ.485, ரூ.666, ரூ.949 மற்றும் ரூ.999/- ஆகும். இந்த அனைத்து திட்டங்களும் (மேலே குறிப்பிட்டுள்ளபடி) தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கான அழைப்பு நன்மையை வழங்காது.
ரூ.39/-க்கு முன்னர், நிறுவனத்தின் ரூ.118/- அறிமுகமானதும், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகளை (1ஜிபி அளவிலான உயர் வேக 3ஜி டேட்டா), பெர்சனலைஸ்டு ரிங்டோன் (PRBT) சேவை ஆகியவைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications