பிஎஸ்என்எல் அதிரடி: ரூ.501/-க்கு அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் டேட்டா.!

|

சமீப காலமாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் அறிமுகம் செய்யும் ரீசார்ஜ் திட்டங்களையும், திருத்தப்பட்ட கட்டண திட்டங்களையும் பார்க்கும் போது, இது அரசாங்கம் நடத்தும் ஒரு நிறுவனம் தானா.? அல்லது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ போன்றதொரு தனியார் நிறுவனமா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.

பிஎஸ்என்எல் அதிரடி: ரூ.501/-க்கு அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் டேட்டா.!

சில வாரங்களுக்கு முன்னர் பிஎஸ்என்எல் கடுமையான வாடிக்கையாளர் விமர்சனத்தை எதிர்கொண்டது. நிறுவனத்தின் பிரபலமான திட்டங்களின் நன்மைகள் மற்றும் செல்லுபடி காலம் குறைக்கப்பட்டதே அதற்கு காரணமாகும். அதற்குப்பின் பிஎஸ்என்எல் ஒரு தனியார் நிறுவனம் போன்றே செயல்பட தொடங்கியது.

ஜனவரி 15, 2018 முதல் அமல்படுத்தி வழங்கி வருகிறது

ஜனவரி 15, 2018 முதல் அமல்படுத்தி வழங்கி வருகிறது

பிஎஸ்என்எல் அதன் ரூ.186/- திட்டம் தொடங்கி அதன் சிக்ஸர் 666 திட்டம் வரையிலாக அதன் மொத்த ரீசார்ஜ் திட்டங்களையும் அதிரடியான முறையில் திருத்தி, அந்த புதிய மாற்றங்களை கடந்த ஜனவரி 15, 2018 முதல் அமல்படுத்தி வழங்கி வருகிறது.

ரூ.186, ரூ.187, ரூ.349, ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666-ல் திருத்தம்

ரூ.186, ரூ.187, ரூ.349, ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666-ல் திருத்தம்

அந்த திருத்தத்தில் ஒட்டுமொத்தமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அவைகள் ரூ.186, ரூ.187, ரூ.349, ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666 ஆகியவைகளாகும் என்பதும், இந்த திட்டங்கள் அனைத்துமே ஜியோவின் சமீபத்திய அறிமுகங்களுடன் ஒற்றுப்போகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹேப்பி ஆபர் திட்டம் அறிமுகமானது

ஹேப்பி ஆபர் திட்டம் அறிமுகமானது

பின்னர் நிறுவனத்தின் ஹேப்பி ஆபர் திட்டம் அறிமுகமானது. அதனை தொடர்ந்து இன்று பிஎஸ்என்எல் அதன் ரூ.501/- என்கிற புதிய ரீசார்ஜ் திட்டமொன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது ஒரு வைஃபை + சர்வதேச ரோமிங் தரவு (இந்தியாவிலும் செல்லுபடியாகும்) திட்டமாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கு மட்டுமின்றி

இந்தியாவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கு மட்டுமின்றி

இந்த திட்டம் அறிமுகமான மறுகையில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.999, ரூ.1,599, மற்றும் ரூ.1,999/- ஆகிய மூன்று வைஃபை + பொதிகள் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ரூ.501/- ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் பயணிக்கும் அனைத்து பயனர்களுக்கு வரம்பற்ற அளவிலான அதிவேக தரவை வழங்கும்.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
வைஃபை+ சேவை

வைஃபை+ சேவை

30 நாட்கள் என்கிற செல்லுடியை கொண்டுள்ள ரூ.501/- என்கிற வைஃபை+ சேவை என்னவென்று நீங்கள் யோசிக்கலாம். பிஎஸ்என்எல்-ன் வைஃபை+ சேவையானது ஒரு சர்வதேச வைஃபை ரோமிங் சேவையாகும், இது உலகெங்கிலும் உள்ள ஹாட்ஸ்பாட் வழியாக அதிவேக தரவை அனுபவிக்க உதவுமொரு சேவையாகும்.

மைபிஎன்எல்ஆப்

மைபிஎன்எல்ஆப்

இந்த வைஃபை ரோமிங் சேவையானது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. மேலும் சேவையின் அதிவேக தரவைப் பெற மைபிஎன்எல்ஆப்-தனை (My BSNL App) ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக்டிவேட் செய்யலாம்

ஆக்டிவேட் செய்யலாம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இந்த பிஎஸ்என்எல் வைஃபை+ பேக்கை வாங்கலாம் மற்றும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னரே ஆக்டிவேட் செய்யலாம். இந்த இணைப்பை (https://wifilookup.com) பயன்படுத்தி நீங்கள் நாடுகளின் எந்தெந்த பகுதியில் வைஃபை சேவைகள் கிடைக்கும் என்பதை சோதிக்கலாம்:

உள்ளூர் வைஃபை சேவை வழங்குநர்களுடன் பிஎஸ்என்எல் கூட்டு

உள்ளூர் வைஃபை சேவை வழங்குநர்களுடன் பிஎஸ்என்எல் கூட்டு

சர்வதேச நாடுகளில் ரோமிங் செய்யும் போது இந்திய மக்களுக்கு இணையத்தை வழங்கும் நோக்கத்தின்கீழ் குறிப்பிட்ட நாடுகளின் உள்ளூர் வைஃபை சேவை வழங்குநர்களுடன் பிஎஸ்என்எல் கூட்டு சேர்ந்து இந்த சேவையை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம்துறை சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Introduces New WiFi+ Pack of Rs 501, Offers Unlimited High-Speed Data Through Hotspots Across the World for 30 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X