BSNL, Jio மற்றும் Airtel பைபர் பிளான் திட்டங்கள்.. உண்மையில் எது சிறந்த திட்டம் தெரியுமா?

|

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் புதிய இணையத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன, இப்போது இந்த நிறுவனங்களைப் போல் பிஎஸ்என்எல் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.

BSNL vs ஜியோ vs ஏர்டெல்

BSNL vs ஜியோ vs ஏர்டெல்

BSNL நிறுவனம் ஜியோ ஃபைபர் ரூ. 599 மற்றும் ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ. 499 திட்டத்திற்குப் போட்டியாக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் எது பெஸ்ட் என்று பார்க்கலாம்.இந்த புதிய திட்டத்தின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் 60 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 3300 ஜிபி வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது.

தீபாவளியை முன்னிட்டு புதிய திட்டம்

தீபாவளியை முன்னிட்டு புதிய திட்டம்

இதில் வரம்பற்ற அழைப்பும் அடங்கும். இருப்பினும், டேட்டா காலாவதியான பிறகு 60 Mbps வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும். பின்னர் 2Mbps வேகத்தில் டேட்டாவிற்கு வரம்பு எதுவுமில்லை, அதாவது பயனர்கள் டேட்டா பற்றி எந்த கவலையுமின்றி இணையத்தைப் பயன்படுத்தலாம்.இந்த திட்டம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14, 2020 முதல் கிடைக்கும் படி BSNL செய்துள்ளது.

சுத்தப்படாது: இனிமே இலவசம் இல்ல- கட்டண வசூலை ஆரம்பிக்கும் Google!சுத்தப்படாது: இனிமே இலவசம் இல்ல- கட்டண வசூலை ஆரம்பிக்கும் Google!

ஜியோவின் ரூ. 699 மற்றும் ரூ. 499 திட்டம்

ஜியோவின் ரூ. 699 மற்றும் ரூ. 499 திட்டம்

குறிப்பாகப் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஜியோவின் ரூ. 699 மற்றும் ரூ. 499 இணையத் திட்டங்களுக்கு எதிரான திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 699 திட்டம் மட்டுமின்றி ஏர்டெலின் ரூ. 699 இணையத் திட்டத்தைப் போல BSNL நிறுவனத்தின் புதிய திட்டம் அமைந்துள்ளது.

ஜியோ ஃபைபர் திட்டம்

ஜியோ ஃபைபர் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 699 இணையத் திட்டம் சில்வர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது, இத்திட்டம் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது. இதில் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டாவும் கிடைக்கிறது, அதாவது 3300 ஜிபி வரை டேட்டா கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டம் எந்த OTT நன்மைகளை வழங்கவில்லை. ஜியோ ஃபைபர் ரூ. 399 திட்டம் 30 எம்.பி.பி.எஸ் வேகத்தில், வரம்பற்ற அழைப்பு மற்றும் OTT சந்தா இல்லாமல் வருகிறது.

எது பெஸ்ட் திட்டம்?

எது பெஸ்ட் திட்டம்?

அதேபோல், ஏர்டெல் ரூ. 499 திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் 3300 ஜிபி வரையிலான டேட்டாவை 40 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்குகிறது. இது வூட், ஹங்காமா, ஷா அகாடமியின் கோச்சிங் மற்றும் விங்க் மியூசிக் மற்றும் பல நன்மைகளைத் தருகிறது. இந்த திட்டங்களுடன் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்தால், ஏர்டெல் பேக் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் திட்டங்களை விட அதிக நன்மை வழங்குவதாகத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Introduces Fiber Basic Plus Plan For Rs. 599, Compare It With Airtel and Jio Fiber Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X