Home
News

மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! எவ்வளவு வேகத்தில் பயன்படுத்தலாம் தெரியுமா?

பிஎஸ்என்எல் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தனியார் நிறுவனங்களை விட மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குவதால் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்நிறுவனம் 4ஜி சேவையை அனைத்து இடங்களுக்கும் கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

 10Mbps வேகத்தில் இணைய சேவையை வழங்கும்

10Mbps வேகத்தில் இணைய சேவையை வழங்கும்

இந்நிலையில் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்த மூன்று திட்டங்களும் 10Mbps வேகத்தில் இணைய சேவையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1-ம் தேதி முதல்

மார்ச் 1-ம் தேதி முதல்

மேலும் வெளிவந்த தகவலின்படி இந்த மூன்று திட்டங்களும் மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 1-ம் தேதி முதல் தான் இந்த திட்டங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூன்று பிராட்பேண்ட்திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல் ரூ.299 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.299 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.299 டிஎஸ்எல் பிராட்பேண்ட் திட்டமானது 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த டேட்டா நன்மையை 10Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். பின்பு 100ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டம் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பயனர்கள் ரூ.399 திட்டத்திற்குமாற்றப்படுவர். அதேபோல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை தவிர அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டம் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.399 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.399 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.399 டிஎஸ்எல் பிராட்பேண்ட் திட்டமானது 200ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த டேட்டா நன்மையை 10Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். பின்பு 200ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.599 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.599 டிஎஸ்எல் பிராட்பேண்ட் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் திட்டமானது 500ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த டேட்டா நன்மையை
10Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். பின்பு 500ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும்.

மூன்று பிராட்பேண்ட்

மேலே கூறப்பட்டுள்ள இந்த மூன்று பிராட்பேண்ட் திட்டங்களும் இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகின்றன. பின்பு ரூ. 299 மற்றும் ரூ. 399 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு ரூ.500 பாதுகாப்பு முன்பணம் செலுத்த வேண்டும். அதபோல் ரூ.299 மற்றும் ரூ.555 பிராட்பேண்ட் திட்டங்களை தற்போதைய மற்றும் புதிய பயனர்கள் பயன்படுத்த முடியும்என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL introduced Rs. 299, Rs. 399 and Rs. 555 Broadband Plans: What are the offers?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X