பிஎஸ்என்எல் சுதந்திர தின ஸ்பெஷல்: ரூ.147 திட்டத்தில் இனி மொத்தமும் இருக்கு., எல்லாம் எக்ஸ்டரா!
பிஎஸ்என்எல் ரூ.147 திட்டத்தில் 10 ஜிபி டேட்டா உட்பட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மறுபுறம் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை திரும்பப் பெறுகிறது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் பிஎஸ்என்எல் சென்னை வட்டத்திற்கு 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 10 ஜிபி டேட்டா சலுகையுள்ள ரூ.147 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.147 திட்டத்தை பிஎஸ்என்எல் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. அதோடு ரூ.1999 திட்டம் உட்பட பல திட்டங்களில் கூடுதல் செல்லுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது.

பல்வேறு திட்டங்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு
இருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் பதஞ்சலி திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை திரும்பப்பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டம் மற்றும் கூடுதல் சலுகைகள் ஆகஸ்ட் 1 2020 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.147 திட்டத்தை சென்னை வட்டத்திற்கு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது. அதோடு ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் குரல் அழைப்புகள் முடிந்தவுடன் கட்டணம் வசூலிக்கப்படும் என ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஜிபி டேட்டா
கூடுதலாக நிறுவனம் ரூ.147 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி டேட்டாவையும் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களையும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது.

ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை
அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.1999 திட்டத்தில் 74 கூடுதல் செல்லபடியை நிறுவனம் வழங்குகிறது. ரூ.1999 திட்டமானது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.

தினசரி 3 ஜிபி டேட்டா
அதோடு ரூ.1999 திட்டத்தில் 365 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது. ஆக்ஸ்ட் 1 முதல் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இந்த திட்டத்தில் 439 நாட்கள் செல்லுபடியை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு நாட்கள் அதிகரிப்பு
ரூ.247 திட்டம் ஆகஸ்ட் 1 2020 முதல் ஆகஸ்ட் 30 2020 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஆறு நாட்கள் செல்லுபடி நாட்களை அதிகரித்து வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி தரவு மற்றும் ஈரோஸ் நவ் சந்தா, பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சேவை உள்ளிட்ட அணுகலை நிறுவனம் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் அசல் செல்லுபடியாகும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம்
பிஎஸ்என்எல் டிஜிட்டல் இந்தியா திட்டம் என்று அழைக்கப்படும் ரூ.429 பேக்கில் ஈரோஸ் நவ் சந்தா சலுகையை இணைத்துள்ளது. இந்த திட்டத்தில் 1 நாளைக்கு 1 ஜிபி வரம்பற்ற அழைப்பு என 81 நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ. 429 மற்றும் ரூ.247 திட்டம்
ரூ. 429 மற்றும் ரூ.247 திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் ஈரோஸ் நவ் சேவைக்கான பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








