Home
News

சைலன்டாக 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த BSNL.. தினமும் 2ஜிபி டேட்டா.. 60 நாள் வேலிடிட்டி..

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்த 2024-ம் ஆண்டு துவக்கத்தில் புதிய மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அதவாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.91 மற்றும் ரூ.288 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் தற்போது சில மாநிலங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது ரூ.91 மற்றும் ரூ.288 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சைலன்டாக 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த BSNL..

பிஎஸ்என்எல் ரூ.91 திட்டம் (BSNL Rs 91 Plan) ஆனது 7 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 600எம்பி டேட்டா மற்றும் 700 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு வேறு எந்த நன்மையும் வழங்காது இந்த திட்டம். குறிப்பாக எஸ்எம்எஸ் நன்மையை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.288 திட்டம் (BSNL Rs 288 Plan) ஆனது 60 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும். ஆனால் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் இல்லை.

சைலன்டாக 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த BSNL..

குறிப்பாக டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை மட்டும் விரும்பும் பயனர்கள் இந்த புதிய ரூ.91 மற்றும் ரூ.288 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ள சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை இதில் உள்ளது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சைலன்டாக 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த BSNL..

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் போன்ற பல சிறப்பான நன்மைகள் இதில் உள்ளன. மேலும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் இதில் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL introduced new Rs 91 and Rs 288 prepaid plans: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X