எவ்ளோ டேட்டா வேணுமோ யூஸ் பண்ணிக்கோங்க.. வெறும் ரூ.500-க்கு அறிமுகமான புதிய BSNL பிளான்!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகம் செய்தாலும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை, விரைவில் இந்நிறுவனம் 4ஜி சேவையை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

ரூ.499 பைபர் பேசிக் திட்டம்

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.499 விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய திட்டம் ரூ.499 பைபர் பேசிக் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ449 திட்டம் தான் இப்போது பெயர் மாற்றப்பட்டு ரூ.499 பைபர் பேசிக் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!

இரண்டு திட்டங்களும் உள்ளன

ஆனாலும் ரூ.449 திட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. இப்போது ரூ.449 திட்டம் பைபர் பேசிக் நியோ என்று அழைக்கப்படுகிறது. தெளிவாகக் கூறவேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இப்போது ரூ.499 பைபர் பேசிக் திட்டம் மற்றும் ரூ.449 பைபர் பேசிக் நியோ என்ற இரண்டு திட்டங்களும் உள்ளன. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!

 ரூ.499 பைபர் பேசிக் திட்டம்

ரூ.499 பைபர் பேசிக் திட்டம்

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.499 பைபர் பேசிக் திட்டம் ஆனது 40Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மறறும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவு டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். அதேபோல்
பயனர்கள் இந்த திட்டத்தைப் பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனாலும் இப்போது இந்த திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!

ரூ.449 பைபர் பேசிக்  நியோ திட்டம்

ரூ.449 பைபர் பேசிக் நியோ திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.449 பைபர் பேசிக் நியோ திட்டம் ஆனது 30Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மறறும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவு டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். அதேபோல் பயனர்கள் இந்த திட்டத்தை பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

2023 மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி.. அதுக்கு அப்புறம்? Google கிட்ட இருந்து வந்த பேட் நியூஸ்!2023 மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி.. அதுக்கு அப்புறம்? Google கிட்ட இருந்து வந்த பேட் நியூஸ்!

விரைவில் நீக்கம்..

விரைவில் நீக்கம்..

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் ரூ.775 மற்றும் ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்ததிட்டங்கள் சுதந்திர தினத்தை ஒட்டி விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

பிஎஸ்என்எல் 4ஜி

பிஎஸ்என்எல் 4ஜி

அதேபோல் சமீபத்தில் பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சரியான தேதியைக் குறிப்பிடப்படவில்லை.

ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!

 பிப்ரவரி அல்லது மார்ச்

அதாவது ட்விட்டரில் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் 4ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான விஷயம். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Introduces New Rs 499 Broadband Plan: Get Every Detail: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X