Home
News

சும்மா புகுந்து விளையாடலாம்: ரூ.599-க்கு வரம்பற்ற டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்!

ஏர்டெல் வழங்கும் ரூ.499 எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை ரூ.599-க்கு வரம்பற்ற தரவோடு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற இணைய சேவை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் மலிவு விலை திட்டம்

பிஎஸ்என்எல் மலிவு விலை திட்டம்

ஜியோ, ஏர்டெல் போன்று பிஎஸ்என்எல் மலிவு விலை திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது ரூ.599 திட்டத்தை அறிமுகப்படுத்தியுளளது. ஏர்டெல் வழங்கும் ரூ.499 எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்துடன் பிஎஸ்என்எல்லின் புதிய ரூ.599 திட்டம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.599 திட்டம் வரம்பற்ற இணைய சேவை

ரூ.599 திட்டம் வரம்பற்ற இணைய சேவை

ரூ.599 திட்டம் வரம்பற்ற இணையத்தை வழங்குகிறது. அதோடு 60 எம்பிபிஎஸ் வேக வரம்பில் இந்த திட்ட் அணுக கிடைக்கும். இந்த புதிய திட்டம் ஃபைபர் டூ ஹோம் எஃப்டிடிஎச் சேவைகளை கொண்ட அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும். இந்த புதிய பிராட்பேண்ட் திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதோடு பிஎஸ்என்எல் ரூ.449 திட்டத்தையும் புதுப்பித்துள்ளது.

பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டம்

பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டம்

பிஎஸ்என்எல்லின் புதிய ஃபைபர் பேசிக் பிளஸ் பிராட்பேண்ட் திட்டம் ரூ.599 விலையில் வரம்பற்ற தரவை வழங்குகிறது, அதே நேரத்தில் மொத்த தரவு 60 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 3300 ஜிபி வரை வழங்குகிறது. இந்த தரவு வரம்பு முடிந்தவுடன் அதன் வேகம் 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

வரம்பற்ற இலவச அழைப்பு

வரம்பற்ற இலவச அழைப்பு

அதோடு பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் அனைத்து பிற நெட்வொர்க்குகளுக்கும் 24 மணிநேரமும் வரம்பற்ற இலவச அழைப்பை வழங்குகிறது. ஒரு மாத திட்டத்தை அதிக டேட்டாவுடன் தேர்வு செய்ய இது சிறந்தவையாகும்.

ஓடிடி சலுகை குறித்த விவரங்கள்

ஓடிடி சலுகை குறித்த விவரங்கள்

ரூ.599 திட்டத்தில் பிஎஸ்என்எல் வழங்கும் ஓடிடி சலுகை குறித்த விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் ஓடிடி இயங்குதளத்தை அணுக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிற நிறுவனங்களின் குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்களிலும் ஓடிடி அணுகல் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.449 திட்டத்தை புதுப்பித்துள்ளது. இந்த திட்டத்தில் 3.3 டிபி வரை டேட்டாவை வழங்குகிறது. 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வேகத்தை அணுக முடியும்.

Best Mobiles in India

English summary
BSNL Introduced Fiber Basic Plan at Rs.599 With Unlimited Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X