Home
News

Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைபர் (Jio Fiber) சேவைக்கு வேட்டு வைக்கும் விலைகளில்.. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது 2 புதிய பேஸிக் பிராட்பேண்ட் திட்டங்களை (Basic Broadband Plans) அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டங்கள்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

என்ன திட்டங்கள்? பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது அதன் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ்.. ஃபைபர் பேசிக் ஓடிடி (Fiber Basic OTT) மற்றும் ஃபைபர் பேசிக் சூப்பர் (Fiber Basic Super) என்கிற 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 2 புதிய BSNL திட்டங்கள் அறிமுகம்!

என்ன விலை? ஃபைபர் பேஸிக் ஓடிடி திட்டமானது மாதம் ரூ.599 க்கும், ஃபைபர் பேஸிக் சூப்பர் திட்டமானது மாதம் ரூ.699 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த கையோடு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பல பாரத் ஃபைபர் திட்டங்களை திரும்ப பெற்றுள்ளது (Withdrawn several Bharat Fiber plans).

அப்படியாக திரும்ப பெறப்பட்ட அல்லது நிறுத்தப்பட்ட பாரத் ஃபைபர் திட்டங்களின் கீழ் இருக்கும், தற்போதைய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள், புதிய பாரத் ஃபைபர் திட்டங்களுக்கு மாற்றப்படுவார்கள். இந்த மாற்றங்கள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 2 புதிய BSNL திட்டங்கள் அறிமுகம்!

ரூ.599 மதிப்புள்ள ஃபைபர் பேஸிக் ஓடிடி திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.599 திட்டமானது 75எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை (Upto 75Mbps Speed) வழங்கும். இது ஃபேர் யூசேஜ் பாலிஸியின் (Fair Usage Policy - FUP) கீழ் மொத்தம் 4000ஜிபி அல்லது 4டிபி டேட்டாவை வழங்கும்.

மாதாந்திர எஃப்யுபி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, ரூ.599 திட்டத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் 4எம்பிபிஎஸ் (4Mbps) என்கிற ஸ்பீடின் கீழ் அன்லிமிட்ட் இண்டர்நெட்டை (Unlimited Internet) பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டம் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்ட் கால்களையும் (Unlimited Calls) வழங்கும்.

ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 2 புதிய BSNL திட்டங்கள் அறிமுகம்!

கூடுதலாக இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சூப்பர் (Disney+ Hotstar Super) திட்டத்திற்கான இலவச சந்தாவையும் வழங்கும். கிடைக்கும் தன்மையை (Availability) பொறுத்தவரை, ரூ.599 மதிப்புள்ள ஃபைபர் பேஸிக் ஓடிடி திட்டமானது இந்தியாவில் எங்கெல்லாம் பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் (BSNL FTTH) சேவைகள் உள்ளதோ.. அங்கெல்லாம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

ரூ.699 மதிப்புள்ள ஃபைபர் பேஸிக் சூப்பர் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.699 திட்டமானது 125எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை (Upto 125Mbps Speed) வழங்கும். இதுவும் ஃபேர் யூசேஜ் பாலிஸியின் (Fair Usage Policy - FUP) கீழ் மொத்தம் 4000ஜிபி அல்லது 4டிபி டேட்டாவை வழங்கும்.

மாதாந்திர எஃப்யுபி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, ரூ.699 திட்டத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் 8எம்பிபிஎஸ் (8Mbps) என்கிற ஸ்பீடின் கீழ் அன்லிமிட்ட் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டமும் கூட இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்ட் கால்களை வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் எந்த வகையான ஓடிடி சந்தாவும் இலவசமாக கிடைக்காது. எனவே ஓடிடி சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆட்-ஆன் பேக்குகள் (Add-on Packs) மூலம் தங்களுக்கு தேவையான ஓடிடி சேவைகளை ஆக்டிவேட் (Activate) செய்து கொள்ள வேண்டும். கிடைக்கும் தன்மையை பொறுத்தவரை, இந்த திட்டம் பஞ்சாப் டெலிகாம் சர்க்கிள் (Punjab Telecom Circle) தவிர, நாடு முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Introduced 2 New Basic Fiber Broadband Plans For Rs 599 Rs 699 with 4000GB Monthly Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X