வாழ்நாள் முழுவதிலுமான இலவச வாய்ஸ் கால்கள், ரெடியாகும் பிஎன்என்எல்.!

2017-ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் இலவச வாழ்நாள் குரல் அழைப்புகள், வைஃபை ஹாட்ஸ்பாட் மண்டலங்கள் என பல அதிரடிகளை களம் இறக்குகிறது. உடன் நாட்டின் சிறந்த நெட்வொர்க்காக உருவாகவும் திட்டமிடுகிறது.

|

ஒரு விடயம் நிஜமாகவே இலவசமாக கிடைக்கிறதா.? இல்லையா..? என்பது இரண்டாம் பட்சம் தான். முதல்பட்சமாக பார்க்கப்படுவது "இலவசம்" என்ற வார்த்தை தான். அந்த அளவிற்கு மக்களை (குறிப்பாக தமிழக மக்களை) "இலவசம்" என்ற ஒற்றை வார்த்தை ஆட்டிப் படைக்கிறது.!

அதற்கு மாபெரும் சாட்சி ரிலையன்ஸ் ஜியோ தான். எதெற்க்கெடுத்தாலும் இலவசம், எல்லாம் இலவசம் என்று கூறி சலுகைகளை கூட ஒரு வகையான இலவசங்கள் தான் என்ற மனநிலையை உருவாக்கி விட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ. பிற போட்டியாளர்களும் வேறு வழியின்றி அதே 'பார்மூலா'வை தான் பின்பற்றி வருகின்றன. ஆனால் அந்த பட்டியலில் பிஎஸ்என்எல் நிறுவனமும் நுழைவதென்பது நிஜமாகவே ஒரு அட்டகாசமான செய்தி தான்.!

ஆம். இலவச வாழ்நாள் குரல் அழைப்புகள், வைஃபை ஹாட்ஸ்பாட் மண்டலங்கள், நாட்டின் சிறந்த நெட்வொர்க்காக உருவாகுவது என பிஎஸ்என்எல் பல முற்போக்கு திட்டங்களை 2017-ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

ஜியோவை விட மலிவு

ஜியோவை விட மலிவு

பிஎஸ்என்எல் விரைவில் (2017) தனது பயனர்களுக்கு இலவச வாழ்நாள் குரல் அழைப்புகளை அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒப்பிடுகையில் இந்த தொலைதொடர்பு நிறுவனம் மலிவான விலையில் குரல் அழைப்புகளை அளிக்கலாம் என்பதால் இந்த திட்டம் நிச்சயமாக மற்ற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ரூ.25 பைசா / நிமிடம்

ரூ.25 பைசா / நிமிடம்

சமீபத்தில் பிஎஸ்என்எல் தொலை தொடர்பு ஆப்ரேட்டர் உள்ளூர் அல்லது வெளியூர் அழைப்புகளுக்கு ரூ.25 பைசா / நிமிடம் என்ற விலையில் ரூ.136/-க்கு பிரீடம் திட்டம் என்ற பெயரின் கீழ் வழங்கியது. 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்துடன் 1ஜிபி அளவிலான இலவச தரவும் ஆரம்ப சலுகையாக 30 நாட்கள் வழங்கப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

சமீபத்தில் பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அதன் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு இடையிலேயான இந்த இலவச வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆனது ஒவ்வொரு ஞாயிறு இரவு 9 முதல் காலை 7 மணி வரை வழங்கப்பட்டது.

டிஜிட்டல் முறை

டிஜிட்டல் முறை

ஆம், பிஎஸ்என்எல் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது இதை பயனர்கள் குறுகிய வரிசைகளில் மற்றும் எந்த தொந்தரவும் இன்றி பெற பிஎஸ்என்எல் நிறுவனம் வழிவகுக்கும். ஒரு புதிய பிஎஸ்என்எல் இணைப்பு பயனர் அவரின் ஆவணங்களை சமர்பிக்க தேவையின்றி உயிரியளவுகள் தரவு, ஆதார் அட்டை எண் ஆகியவைகளை நிறுவனம் ஏற்றுக்கொள்ள தொடங்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வைஃபை ஹாட்ஸ்பாட்

வைஃபை ஹாட்ஸ்பாட்

மைசூர் பூங்காவை தொடர்ந்த்யு இந்த தொலைதொடர்பு நிறுவனம் விரைவில் மைசூர் அரண்மனை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இப்போ வா போட்டி போடலாம், கொக்கரிக்கும் ரூ.53/- ஆபர் வழங்கும் வோடபோன்.!

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL to Introduce Free Lifetime Voice Calls in 2017, Aims to be the Best Network. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X