Home
News

இனி வச்சி செய்றோம்.. 7700 டவர்கள்.. BSNL தலைவரே சொல்லிட்டாரு.. தமிழ்நாடு கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பிரவின் குமார் புர்வார், தமிழ்நாட்டில் எப்போது 4ஜி சேவைகள் (4G Service) விரிவுபடுத்தப்படும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பிஎஸ்என்எல் 4ஜி இங்கே எப்போது அறிமுகமாகும்? இதற்காக பிஎஸ்என்எல் என்னென்ன செய்துள்ளது? இதோ விவரங்கள்:

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனமானது பஞ்சாப் (Punjab), ஹரியானா (Haryana), ஹிமாச்சல பிரதேசம் ( Himachal Pradesh), உத்தரகண்ட் (Uttarakhand) மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் (Uttar Pradesh West) உட்பட, வட இந்தியாவின் ஐந்து முக்கிய டெலிகாம் வட்டங்களில் 3500 பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்களை (Base Transceiver Stations - BTS) நிறுவுவதாக அறிவித்துள்ளது.

இனி வச்சி செய்றோம்.. தமிழ்நாடு கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

மேற்கண்ட வட மாநிலங்களை தவிரத்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான முதல் சில பகுதிகளாக தமிழ்நாடு (Tamilnadu), ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மற்றும் தெலுங்கானா (Telangana) ஆகிய மாநிலங்களை தேர்ந்தெடுத்துள்ளது. சமீபத்தில், பிஎஸ்என்எல்-ன் தலைவரான பிரவின் குமார் புர்வார், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற பகுதிகளுக்கு கூடிய விரைவில் 4ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகிற ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையானது பரந்த அளவில் அறிமுகம் செய்யப்படும். தற்போது, ​​ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 4,200 க்கும் மேற்பட்ட 4ஜி டவர்கள் கட்டுமானத்தில் உள்ளன. மேற்குறிப்பிட்டபடி புதிதாக 3500 4ஜி டவர்களும் அமைக்கப்பட உள்ளன. ஆகமொத்தம் இந்தியா முழுவதும் 7700 க்கும் மேற்பட்ட 4ஜி டவர்கள் தயாராகி வருகின்றன என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இனி வச்சி செய்றோம்.. தமிழ்நாடு கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பிஎஸ்என்எல் நிறுவனமானது மிகவும் வேகமாக செய்லபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் இந்நிறுவனத்தின் பயனர்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடம்பெயர்வதால், பிஎஸ்என்எல்-ன் வாடிக்கையாளர் தளம் (Customer base) தொடர்ந்து சுருங்கிகொண்டே போகிறது; கிராமப்புறங்களில் உள்ள பிஎஸ்என்எல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கூட மாதந்தோறும் குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் சேவை சந்தை பங்கானது டிசம்பர் 31, 2023 நிலவரப்படி வெறும் 7.94 சதவீதமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2023-ல், பிஎஸ்என்எல் நிறுவனம் 0.15 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதன் விளைவாக பிஎஸ்என்எல்-ன் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 91.77 மில்லியனாக குறைந்துள்ளது.

இனி வச்சி செய்றோம்.. தமிழ்நாடு கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பிஎஸ்என்எல்-ஐ விட வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. வோடாபோன் ஐடியாவின் 5ஜி சேவை அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கிற நிலைப்பாட்டில், இந்நிறுவனம் 1.36 மில்லியன் சந்தாதாரர்களை இழந்ததுள்ளது. இதன் விளைவாக விஐ-யின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 223.04 மில்லியனாக குறைந்துள்ளது.

வோடாபோன் ஐடியாவானது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் வரை பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் வரை.. சந்தாதாரர்களை இழக்கும் சிக்கல் தொடரத்தான் போகிறது. பிஎஸ்என்எல்-ன் 5ஜி சேவையை பொறுத்தவரை, ஜூன் 2024 க்குள் இந்நிறுவனத்தின் 4ஜி சேவைகளானது விரைவாக 5ஜி-க்கு மேம்படுத்தப்படும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

1 லட்சம் புதிய டெலிகாம் டவர்களுக்கான 4ஜி உபகரணங்களை வாங்குவதற்காக, சிடாட் (CDOT) மற்றும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks) ஆகியவற்றை உள்ளடக்கிய டிசிஎஸ் (TCS) தலைமையிலான கூட்டமைப்புக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் இடையேயான ரூ.24,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-க்கான ரிவைவல் பேக்கேஜ்களை (Revival Packages) அறிவிப்பதன் மூலம் அரசாங்கம் அவ்வப்போது பிஎஸ்என்எல்-க்கு உதவியும் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Installs More 4G Towers Planning 4G Launch Soon in Tamil Nadu Quick Upgrade to 5G by June
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X