சிதறவிட்ட சிந்தியா.. Jio, Airtel வயிற்றில் புளியை கரைத்த BSNL.. இன்னும் 5500 டவர்கள் தான்.. 4G உடனே 5G!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் உற்றுநோக்கும்படியான ஒரு முக்கிய தகவலை இந்தியாவின் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் (Union telecom minister) ஆன ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) வெளிப்படுத்தியுள்ளார்.
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது இந்தியா முழுவதும் 94,500 க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை (4G Towers) நிறுவியுள்ளதை அமைச்சர் சிந்தியா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இந்த 94,500 டவர்களில், 80-85% க்கும் மேற்பட்ட டவர்கள் இப்போது இயக்கப்பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆபரேட்டர் குறுகிய காலத்தில் 1 லட்சம் டவர்களை நிறுவ வேண்டும் என்கிற இலக்கை கொண்டிருந்தது. இந்த மைல்கல்லை கடந்த ஜூன் 2025 க்குள் எட்டியிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அதை செய்ய முடியவில்லை. தற்போது 1 லட்சம் டவர்கள் என்கிற பிஎஸ்என்எல்-ன் இலக்கிற்கு வெறும் 5500 டவர்கள் மட்டுமே பாக்கி உள்ளன.
ஏன் "1 லட்சம் டவர்கள்" பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ் ஆக இருக்கும்? ஏனென்றால் பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் ஆனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இதை மிகவும் எளிதாக 5ஜி நெட்வொர்க்கிற்கு அப்கிரேட் (4G to 5G Upgrade) செய்ய முடியும். ஆக பிஎஸ்என்எல்-ன் 1 லட்சம் 4ஜி டவர்கள் என்பது பிஎஸ்என்எல்-ன் 1 லட்சம் 5ஜி டவர்களுக்கு சமமாகும்.
பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் எப்போது 5ஜி ஆக அப்கிரேட் செய்யப்படும்? பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை முழுமையாக அறிமுகம் செய்து, அதன் 4ஜி ஆனது சர்வீஸ் குவாலிட்டி ஸ்டாண்டர்ட்களை (Service Quality Standards) பூர்த்தி செய்த பின்னரே 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறும் என்பதை அமைச்சர் சிந்தியா உறுதிப்படுத்தி உள்ளார்.
இடி (ET) வெளியிட்டு உள்ள தகவல்களின் படி, 5ஜி சேவையானது இந்தியாவில் உள்ள 99.6% மாவட்டங்களை அடைந்து இப்போது 82% மக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும் விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் 5ஜி சேவைக்குள் நுழைந்து உள்ளது.

இந்நிறுவனம் அதன் போட்டியாளர்கள் (ஜியோ மற்றும் ஏர்டெல்) அதிக கவனம் செலுத்தாத பகுதிகளை தனது 5ஜி நெட்வொர்க் கொண்டு உள்ளடக்க முடிவு செய்தால், ஒட்டுமொத்த 5ஜி கவரேஜ் ஆனது இன்னும் அதிக மக்கள்தொகைக்கு விரிவடைய அதிக வாய்ப்புள்ளது. இந்த போட்டிக்குள் பிஎஸ்என்எல் 5ஜி நுழைவது இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
பிஎஸ்என்எல்-க்கு சாதகமாக தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு இந்நிறுவனத்தால் லாபத்தை ஈட்ட முடிந்தது. மேலும் வருடாந்திர இழப்பும் (Yearly loss) கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இப்போது புதிய சந்தாதாரர்களை (New Subscribers) விரைவாக சேர்க்கும் உத்திகளுக்கு திரும்பியுள்ளதால், இனியும் விஷயங்கள் எளிதாக இருக்காது.
ஏனென்றால் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு கிடைக்கும் புதிய சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் மற்றும் விஐ சேவையில் இருந்து தான் வெளியேறிய வாடிக்கையாளர்களாக தான் இருப்பார்கள். ஒருவேளை பிஎஸ்என்எல் நிறுவனமானது குறைந்த விலையில் அதிவேக நெட்வொர்க் சேவைகளை (Low cost high-speed network services) வழங்க முடிவு செய்துவிட்டால்.. இதன் நெட்வொர்க்குகள் தனியார் ஆபரேட்டர்கள் வழங்குவதை போல வலுவானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இல்லாவிட்டாலும் கூட நல்ல கவரேஜை (Good Coverage) நிர்வகிக்க முடிந்தால் - இந்திய டெலிகாம் சந்தையில் இது நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!


Click it and Unblock the Notifications








