அடேங்கப்பா.. மின்னல் வேகத்தில் செயல்படும் BSNL.. 4G சேவை குறித்து வெளியான முக்கிய தகவல்..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கி அசத்தி வருகிறது. அதேபோல் லைவ் டிவி சேனல், 4ஜி சேவை வழங்கும் பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை குறித்து ஒரு முக்கியத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 62,201 4ஜி டவர்களை நிறுவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) தெரிவித்தார். குறிப்பாக 62,201 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டாலும், அனைத்து டவர்களும் செயல்பாட்டுக்கு வர இன்னும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும் 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்றார் ஜோதிராதித்ய சிந்தியா. அதேபோல் 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ்,டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் "பூரண சுதேசி" (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும். இது இந்திய தொலைத் தொடர்புத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது என்றே கூறலாம்.குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் இணைய இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு 500க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (500 live TV channels) இலவசமாகப் பார்க்கும் வசதியைத் தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை இங்கே பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 160 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 320ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் தினசரி இதில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ரூ.997 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) உள்ளிட்ட நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.
குறிப்பாக இதுபோன்ற பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகள் வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








