கேபிள் TV க்ளோஸ்.. BSNL IFTV மாஸ்.. 500-க்கும் மேற்பட்ட TV சேனல்கள் இனி இந்த மாநிலத்திலும் இலவசம்.. எங்கே?
பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அதன் BSNL IFTV என்ற இன்டர்நெட் அடிப்படையிலான இலவச டிவி சேவையை (Internet Protocol-based IFTV service) இந்தியாவில் அறிமுகம் செய்ததது. முதற்கட்டமாக இந்த புதிய சேவையை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் மூன்று மாநிலங்களில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த இலவச இன்டர்நெட் டிவி சேவையை (Free internet TV service) பிஎஸ்என்எல் நிறுவனம் மற்றொரு மாநிலத்திலும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பிஎஸ்என்எல் IFTV சேவையின் கீழ் இலவசமாக மக்கள் 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (BSNL free TV channels) பார்த்து மகிழலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் எச்டி தரத்தில் (HD quality) வழங்கப்படுகிறது என்பதை பிஎஸ்என்எல் நிறுவனம் சுட்டிக் காண்பித்துள்ளது.

கேபிள் TV க்ளோஸ்.. BSNL IFTV தான் மாஸ்:
அதேபோல், பிஎஸ்என்எல்-ன் புதிய IFTV சேவையை வாடிக்கையாளர்கள் பழைய எல்சிடி டிவி (LCD TV) மற்றும் எல்இடி டிவிக்களில் (LED Tv) கூட பார்வையிடலாம் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த இரண்டு வகையான டிவிக்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் (Smart TV), BSNL IFTV சேவையையா பயன்படுத்த மிகவும் எளிமையான ஃபையர் ஸ்டிக் (Fire Stick) சாதனங்களை பயன்படுத்தலாம் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் இன் இன்டர்நெட் அடிப்படையிலான இலவச டிவி சேவையை (BSNL Free Internet Protocol-based IFTV service) நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக குஜராத்தில் அறிமுகம் செய்துள்ளது. குஜராத் ஒன்றிய அணைத்து வட்டங்களில் இருக்கும் மக்கள் இந்த புதிய BSNL IFTV சேவையை பயன்படுத்தி மகிழலாம் என்று BSNL தனது X பக்க பதிவின் வாயிலாக அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் இன் இன்டர்நெட் அடிப்படையிலான இலவச டிவி சேவையை (BSNL Free Internet Protocol-based IFTV service):
இந்த பிஎஸ்என்எல் IFTV சேவையை நிறுவனம் இதற்கு முன்பு மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் குஜராத் வட்டத்தையும் இணைத்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வின் போது, IFTV சேவையை BSNL அறிமுகம் செய்தது.
இதனுடன், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்றொரு சேவையான டைரக்ட்-டு-மொபைல் (Direct-to-Mobile - D2M) என்று சேவையையும் அறிமுகம் செய்துள்ளது. இதை சுருக்கமாக பிஎஸ்என்எல் நிறுவனம் BiTV என்று குறிப்பிடுகிறது. இந்த BiTV சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் புதுச்சேரியில் அறிமுகம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் இலவசம் (500 Live TV Channels FREE):
இந்த சேவையின் கீழ், மொபைல் பயனர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை கண்டு மகிழலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் ஃபைபர் அடிப்படையிலான இணைய டிவி சேவையைக் குறிக்கிறது. பயனர்கள் 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் பிரீமியம் பே-டிவி உள்ளடக்கத்தை கிரிஸ்டல் தெளிவான தரத்தில் அனுபவிக்க அனுமதிக்கிறது. முக்கியமாக, பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பயனர்கள் கூடுதல் செலவின்றி IFTV சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








