ஜியோவை சமாளிக்க ரூ.42/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்.!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ நுழைவு முதல் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் ஜியோ ப்ரைம் சேவைகள் வரை எல்லாமே மற்ற தொலை தொடர்பு ஆப்ரேட்டர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.

ஜியோவை சமாளிக்க ஒவ்வொரு தொலை தொடர்பு ஆப்ரேட்டரும் வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்ற சலுகைகளை வழங்கும் மறுபக்கம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் போட்டியாளர்களை மற்ற ஆப்ரேட்டர்களின் சலுகைகளை சமாளிக்கவும் வேறொரு முயற்சியை நிகழ்த்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குரல் அழைப்புகள்

குரல் அழைப்புகள்

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் குரல் அழைப்புகள் மீதான இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஆன்நெட் கால்கள் வெறும் 10 பைசா / நிமிடம் மற்றும் ஆப்நெட் குரல் அழைப்புகள் 30 பைசா / நிமிடம் ஏஎன்ற நன்மையை வாடிக்கையாளர் பெற முடியும்.

ரூ.13/- மற்றும் ரூ.15/-

ரூ.13/- மற்றும் ரூ.15/-

அரசு நடத்தும் இந்த தொலை தொடர்பு ஆபரேட்டர் இதற்கு முன்பு 'பெற்று மினிட் திட்டம்' மற்றும் 'பெர் செகண்ட் திட்டம்' என்ற பெயரின் கீழ் ரூ.13/- மற்றும் ரூ.15/- என்ற இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

உள்ளூர் மற்றும் வெளியூர்

உள்ளூர் மற்றும் வெளியூர்

பெர் மினிட் திட்டத்தின் கீழ் அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு ரூ.0.49பைச/ நிமிடத்திற்கும், பெர் செகண்ட் திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் 1 பைசா / நொடிக்கு என்ற விலையில் பிஎஸ்என்எல்களுக்கு இடையிலேயான அழைப்புகளையும், இதர நிறுவனங்களுக்கு 1.2 பைசா என்ற விலையிலும் வழங்கியது.

எஸ்டிவி 42 மற்றும் எஸ்டிவி 88

எஸ்டிவி 42 மற்றும் எஸ்டிவி 88

தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய எஸ்டிவி 42 மற்றும் எஸ்டிவி 88 ஆனது ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் ஆகிய குரல் அழைப்பு விகிதங்களை குறைத்துள்ளது.

பெர் மினிட்

பெர் மினிட்

எஸ்டிவி 42 பேக் மூலம் ஏற்கனவே பெர் மினிட் சலுகையை அனுபவிக்கும் வாடிக்கையாளர்கள் ஆன்-நெட் அழைப்புகள் மீது 10 பைசா / நிமிடம் என்ற நன்மையை பெறலாம் மற்றும் ஆப்-நெட் அழைப்புகளை 30 பைசா / நிமிடம் என்ற விலையில் அணுகலாம்.

பெர் செக்கண்ட்

பெர் செக்கண்ட்

மறுபக்கம் எஸ்டிவி42 மூலம் பெர் செக்கண்ட் சலுகையை ஏற்கனவே பெறும் வாடிக்கையாளர்கள் ஆன் நெட் அழைப்புகளை 2 பைசா / 3 நொடிகள் மற்றும் ஆப்-நெட் அழைப்புகளை 1 பைசா / 3 நொடிகள் என்ற விகிதத்தில் நன்மைகளை பெறலாம்.

செல்லுபடி

செல்லுபடி

எஸ்டிவி42 போலவே தான் எஸ்டிவி 88 திட்டமும் நன்மைகளை வழங்குகிறது இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு செல்லுபடியாகும் காலம் மட்டுமே. எஸ்டிவி 42 பேக் ஆனது 21 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் எஸ்டிவி 88 பேக் ஆனது 48 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ பிராட்பேண்ட் : 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 3 மாதங்களுக்கு இலவசம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
BSNL Hits Out At Rivals With New STV 42 and STV 88 Plans. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot