84 நாட்கள் வேலிடிட்டி, டெய்லி 3GB டேட்டா, ஓடிடி.. அசத்தலான 2 BSNL திட்டங்கள்.! யோசிக்காம ரீசார்ஜ் பண்ணுவீங்க.!
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 4ஜி சேவை மட்டும் தான் இல்லை, ஆனாலும் அருமையான சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன.
அதேபோல் தற்போது 4ஜி சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 84 நாட்கள் வேலிடிட்டி தரும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளது. இப்போது அந்த திட்டங்களின் சலுகைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. குறிப்பாக ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) போன்ற சேவைகளையும் இலவசமாக இந்த திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா நன்மையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் கேமிங், லிஸ்ட்ன் மியூசிக் சர்வீசஸ் மற்றும் பல போன்ற கூடுதல் நன்மைகள் உள்ளன. குறிப்பாக இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 மற்றும் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக டேட்டா மற்றும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி தருவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்நிறுவனம் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் சில அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது இப்போது அந்த திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 30 நாட்களுக்கு ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2999 நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டம் 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகல் உள்ளிட்ட அசத்தலான நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும்.
அதேபோல் தற்போது நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகள் வழங்கும் பணிகள், 4ஜி டவர்களை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4ஜி மென்பொருள் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைய வரும் டிசம்பர் மாதம் வரையில் அவகாசம் தேவைப்படும் என்றும், 4ஜி டவர்கள் சோதனை மற்றும் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்குக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








