BSNL அதிரடி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 84 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்? என்னென்ன நன்மைகள்?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் இந்நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா நன்மைகளைத் தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதாவது ரூ 485, ரூ 499 மற்றும் ரூ 599 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. இப்போது இந்த மூன்று திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 485 prepaid plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டதின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 123ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 499 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மை உள்ளது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ 599 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 599 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டாவை வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டா நன்மையை நீக்கவிட்டது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனாலும் இந்த திட்டத்தில் எக்கச்சக்க நன்மைகள் உள்ளன.

அதாவது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்த ரூ 599 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 முடிிள ஆக மாற்றப்படும்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையைக் கொண்டுவரும். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சேவையும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








