Home
News

அள்ளி கொடுக்கும் BSNL.. வெறும் ரூ.300 போதும்.. தினமும் 3GB டேட்டா, வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். எனவே தான் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.300-க்கு கீழ் அதிக நன்மைகளை வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதாவது ரூ.269, ரூ.298 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் அதிக நன்மைகளை வழங்குகின்றன. இந்த மூன்று ப்ரீபேய்ட் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அள்ளி கொடுக்கும் BSNL.. வெறும் ரூ.300 போதும்..தினமும் 3GB டேட்டா..

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ( bsnl rs 269 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது வரம்பற்ற நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன. மேலும் Arena மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல் (Astrotell), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 298 plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 51 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 52ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும்.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்கவில்லை பிஎஸ்என்எல் நிறுவனம். நீண்ட நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அள்ளி கொடுக்கும் BSNL.. வெறும் ரூ.300 போதும்..தினமும் 3GB டேட்டா..

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் . மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்திலும் கூடுதல் நன்மைகள் மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கவில்லை பிஎஸ்ன்எல் நிறுவனம்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது 4ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எனவே விரைவில் அனைவரும் பிஎஸ்என்எல் 4ஜ சேவையைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL has three prepaid plans under Rs 300 that offer the most benefits: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X