Just In
- 2 min ago
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- 19 min ago
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- 24 min ago
இப்படி ஒரு ஆல்-ரவுண்டர் பட்ஜெட் போனுக்காக தான் பல மாசம் காத்திருந்தோம்!
- 49 min ago
Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?
Don't Miss
- News
'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'.. தேஜஸ்விக்கு பாஜக செய்த ரகசிய கால் - போட்டு உடைத்த நிதீஷ் கட்சி
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Automobiles
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
BSNL சைலெண்டாக செய்த வேலை.. இந்த காசுக்கு இவ்வளவு நன்மைகளா? புதுசா 3 திட்டம்
குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி உடன் சிறந்த நன்மைகள் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்கான பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம், இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது. குறைந்த விலை, சிறந்த நன்மை என்ற வார்த்தைகளைப் படித்ததும், உங்கள் எதிர்பார்ப்பு ஜியோவின் பக்கம் சென்றிருக்கக் கூடும். நாங்கள் சொல்லப் போகும் திட்டங்கள் ஜியோவிடமிருந்து வரப்போவதில்லை.

பிஎஸ்என்எல் சத்தமில்லாமல் செய்த வேலை
ஆம், இந்தியாவில் இப்போது குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனமாக BSNL தான் திகழ்கிறது. இப்போது BSNL நிறுவனம் சத்தமே இல்லாமல் 3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) சில நாட்களுக்கு முன்பு அறிவித்த இரண்டு புதிய மாதாந்திர ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டங்கள் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. BSNL இப்போது 18 நாட்கள், 20 நாட்கள் மற்றும் 65 நாட்கள் செல்லுபடியாகும் மூன்று புதிய தனித்தனி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.99, ரூ.118 மற்றும் ரூ.319 விலையில் புது திட்டங்கள்
சரி, இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த புதிய திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகின்றன என்பதைப் பார்ப்போம். பிஎஸ்என்எல் சத்தமில்லாமல் அறிமுகம் செய்திருக்கும் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.99, ரூ.118 மற்றும் ரூ.319 விலையில் வருகின்றது. இந்த ரூ.99, ரூ.118 மற்றும் ரூ.319 திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னாள், நிறுவனம் ரூ.228 மற்றும் ரூ.239 என்ற இரண்டு புதிய மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகம் செய்தது என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்
இதன்படி, BSNL நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஐந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. BSNL இன் புதிய ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் 18 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் இலவச PRBT நன்மை உடன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. இதில் டேட்டா அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் என்று எதுவும் இல்லை என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள். PRBT என்பது BSNL வழங்கும் ஒரு சிறப்புச் சேவையாகும், இது பயனருக்கு ரிங் ட்யூனை அமைக்க உதவுகிறது.

BSNL ரூ.118 திட்டத்தின் நன்மைகள்
BSNL இன் ரூ.118 திட்டம் 20 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன், தினசரி 0.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தினசரி டேட்டா உபயோகத்திற்குப் பிறகு இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயனர்கள் SMS நன்மைகளைப் பெற மாட்டார்கள், ஆனால் அவர்கள் இலவச PRBT சந்தாவைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்
இறுதியாக, BSNL ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இது பயனர்களுக்கு 10ஜிபி லம்ப்சம் டேட்டாவை மொத்தமாக வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் நன்மை வரம்பற்ற வாய்ஸ் காலிங் போன்ற நன்மைகளை 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. உங்களுக்கு அதிக டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் தேவைகள் இல்லை என்றால், நீங்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

ரூ. 228 மற்றும் ரூ. 239 திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது?
BSNL சமீபத்தில் அறிமுகப்படுத்திய இரண்டு மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களையும் பற்றி இத்துடன் சேர்த்துப் பார்த்துவிடலாம். BSNL சமீபத்தில் ரூ. 228 மற்றும் ரூ. 239 விலையில் இரண்டும் மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த 2 திட்டங்களும் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் கேமிங் நன்மைகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ரூ.239 திட்டம் பயனர்களின் பிரதான கணக்கில் கூடுதல் ரூ.10 இருப்பை வழங்குகிறது.
ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

BSNL இடமிருக்கும் ஒரே ஒரு சிறிய குறைபாடு இது தான்
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து நீங்கள் வாங்கும் ரீசார்ஜ் திட்டங்களை விட இவை மலிவு விலையில் கிடைக்கிறது. ஆனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்கள் உங்களுக்கு 4G நெட்வொர்க் இணக்கத்துடன் கிடைக்கிறது. ஆனால், BSNL இன் திட்டங்கள் 3ஜி நெட்வொர்க்கில் மட்டுமே இயங்குகிறது. இது மட்டுமே ஒரு சிறிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086