சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் பார்த்த வேலை: "இந்த" திட்டத்தில் கூடுதல் சலுகை.!
பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய திட்டமும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் 4ஜி சேவையை அனைத்து இடங்களுக்கும் கொண்டு வந்தால் சற்று நன்றாக இருக்கும். ஏனெனில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் சிறப்பான 4ஜி சேவையை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சத்தமில்லாமல் அதன் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தியுள்ளது. ஆனாலும் குறிப்பிட்டதிட்டத்தின் அடிப்படை நன்மைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை. பின்பு என்ன மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது?

அதாவது ரூ.1999 திட்டத்தின் OTT சந்தா நன்மைகள் திருத்தப்பட்டுள்ளது. அதாவது பிஎஸ்என்எல்-இன் ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது லோக்தூன் மற்றும் ஈரோஸ் நவ் இலவச சந்தாக்களை வழங்குகிறது.

முன்பு பிஎஸ்எனஎல் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்க்கான லோக்தூன் சந்தாவையும், 60 நாட்களுக்கான ஈரோஸ் நவ் சந்தாவையும் வழங்கியது. ஆனால் சமீபத்தில் திருத்தத்திற்குப் பிறகு, 365 நாட்களுக்கும் ஈரோஸ் நவ் சந்தாவையும் வழங்கும். அதே சமயம் இலவச லோக்தூன் சந்தா நன்மை 60 நாட்களாக குறைக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?
பிஎஸ்என்எல் நிறுவனம் ஒருசில ப்ரீபெய்ட் திட்டங்களில் தான் லோக்தூன் மற்றும் ஈரோஸ் நவ் சந்தாக்களை தொகுக்கிறது. அந்த வரிசையில் ரூ.1,999 திட்டமும் அடக்கம். பின்பு ஓடிடி நன்மைகளை தவிர்த்து, இது பிஎஸ்என்எல் ஹோம் வட்டங்களில் வரம்பற்ற குரல் அழைப்பையும், மும்பை மற்றும் டெல்லி உட்பட தேசிய ரோமிங்கையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,999 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு குறிப்பிட்ட டேட்டா வரம்பு தீர்ந்தவுடன் இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டம் 365 நாட்களுக்கு மொத்தம் 1095 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டதில் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்டத்தில் பயனர்கள் கஸ்டமைஸ்டு ரிங்பேக் டோனுக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள், பின்பு இதை முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் வரம்பற்ற பாடல் மாற்ற விருப்பத்துடன் அனுபவிக்கலாம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 திட்டத்தின் திருத்தப்பட்ட நன்மைகள் ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் வருடாந்திர திட்டங்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல்-இன் ரூ.1999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் இப்போது கிடைக்கக்கூடிய சிறந்த வருடாந்திர திட்டங்களில் ஒன்றாகும். பின்பு தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டத்தையும் வழங்கவில்லை, ஆனால் பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் அதன் ரூ.1,999 திட்டத்தை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications