Home
News

BSNL பயனர்களுக்கு குட் நியூஸ்.. 4G சேவை குறித்து வெளியான முக்கியத் தகவல்..

ஜியோ (jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் (Starlink)) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமும் விரைவில் 4ஜி (4G) சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் பிஎஸ்எனஎல் 4ஜி குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி டவர்

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. அதாவது மார்ச் 5, 2025 நிலவரப்படி 83,629 4ஜி டவர்களை பிஎஸ்என்எல் நிறுவியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL பயனர்களுக்கு குட் நியூஸ்.. 4G சேவை குறித்து வெளியான தகவல்..

எனவே விரைவில் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்நிறுவனம் 1 லட்சம் 4G தளங்களை நிறுவிய பிறகு, 5G ஐ அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் இரண்டு வருடாந்திர திட்டங்களில் சலுகைகளை வழங்கியது. அந்த திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan) முன்பு 336 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் சமீபத்தில் இந்த திட்டத்திற்கு சமீபத்தில் வழங்கப்பட்ட சலுகை மூலம் 365 நாள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே தற்போது பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 365 நாள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பான அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை விரும்பும் பயனர்கள் இதை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 395 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் சமீபத்தில் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சலுகை மூலம் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் இப்போது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும்.

அதுவும் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 850ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.

photo credit: flaticon

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL has reportedly installed 83629 4G sites across India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X