விடியவிடிய இலவச டேட்டா.. இனிமேல் கிடையாது.. வேலையைக் காட்டிய BSNL.. ஷாக் ஆன பயனர்கள்.!
ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி உள்ள நிலையில் பிஸ்என்எல் நிறுவனமும் தனது திட்டத்தின் நன்மையைக் குறைத்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் பயனர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை தான் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையைக் குறைத்துள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் இந்த திட்டத்தின் தேவை தற்போது குறைந்துள்ளது. எனவே தான் இந்த திட்டத்தின் நன்மைகள் குறைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Plan) நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ நைட் டேட்டாவை வழங்கி வந்தது. ஆனால் இனிமேல் ப்ரீ நைட் டேட்டா கிடைக்காது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ப்ரீ நைட் டேட்டா மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. ஆனால் இரவு நேர இலவச டேட்டா தற்போது நீக்கப்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதன்படி பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் நாட்டில் 4ஜி மற்றும் 5ஜி சேயை வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி (4G) சேவையை வழங்க உள்ளது. அதாவது நாட்டில் உள்ள 2ஜி மற்றும் 3ஜி டவர்கள் அனைத்து தற்போதும் 4ஜி டவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர புதிய 4ஜி டவர்களும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி (BSNL 4G) சேவையைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல வோடபோன் ஐடியா நிறுவனமும் கூட கூடிய விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








