சத்தமில்லாமல் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையை குறைத்த BSNL.! முழு விவரம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையைக் குறைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது பிஎஸ்எனஎல் நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்கியது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய பிஎஸ்என்எல் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இந்நிலையில் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை நீக்கி அதற்குப் பதிலாக 120ஜிபி டேட்டா நன்மையை வழங்கப்படுகிறது.
எனவே பிஎஸ்என்எல் பயனர்கள் தற்போது ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 120ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Zing Music உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் மேலே கூறிய நன்மைகள் 15 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச PRBT உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ்,
வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த ரூ.239 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL Tunes, Eros Now சேவைகள், ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவை, அரீனா மொபைல் கேமிங் சேவை, லோக்துன், ஜிங் உள்ளிட்ட நன்மைகளை
வழங்குகிறது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.269 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








