சத்தமின்றி BSNL செய்த வேலை: பிரபலமான ப்ரீபெய்டு திட்டங்களின் நன்மைகள் குறைப்பு.!
பிஎஸ்என்எல் சமீபத்தில் புதிய ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகம் செய்ததுடன் சில பிளான்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. தற்போது இரண்டு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளில் கூட கை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அப்படியென்ன பிரபலமான பிளான்கள் என்று நினைக்கிறீர்களா? அதாவது ரூ.1499 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் பிளான்களின் நன்மைகள் தான்
குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை மிகவும் பிரபலமானது என்றே கூறலாம். குறிப்பாக இந்த திட்டங்களை அதிக பயனர்கள்
தேர்வு செய்துள்ளனர்.
இப்போது ரூ.1499 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் பிளான்களின் பழைய நன்மைகள் என்ன? இப்போது கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீபெய்ட் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஆனது முன்பு 240 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் 2022 ஜூலை 1-ம் தேதி முதல் இந்த திட்டத்தின் வேலிடிட்டிகுறைக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் இப்போது ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 200 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். எனவே இந்த திட்டத்திற்கான ஒரு நாள் செலவு ரூ.4.16 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.4.99 ஆக இருக்கிறது.

ரூ.999 ப்ரீபெய்ட் பிளான் என்னென்ன சலுகைகள் உள்ளன?
ரூ.999 ப்ரீபெய்ட் பிளானில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 200 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 2 மாதங்களுக்கு இலவச PRBT அணுகலும் உள்ளன. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் இப்போது ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். எனவே இந்த திட்டத்திற்கான ஒரு நாள் செலவு ரூ.4.10 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.4.46 ஆக இருக்கிறது.

ரூ.1499 ப்ரீபெய்ட் பிளான் என்னென்ன சலுகைகள் உள்ளன?
ரூ.1499 ப்ரீபெய்ட் பிளானில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், 24ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் பிளான் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இது ஒரு மாதம் வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிளானில் ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் பிளான்.

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் பிளான் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது.
குறிப்பாக Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 50 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 200 நிமிடங்கள் இலவச அழைப்பு நன்மைகள் உள்ளது. இதுதவிர 3ஜிபி டேட்டா, 50 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் அணுகலும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான்.
குறிப்பாக இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் அனைத்தும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விலை உயர்த்த திட்டங்களை தேர்வுசெய்வதை விட இதுபோன்ற பட்ஜெட் விலை திட்டங்களை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications