சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தில் வேலிடிட்டி-ஐ குறைத்து வேலையை காட்டிய BSNL.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பல அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் ப்ரீபெயட் திட்டங்களை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிரபலமான ப்ரீபெய்ட் திட்டம்

பிரபலமான ப்ரீபெய்ட் திட்டம்

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி-ஐ குறைத்துள்ளது. அதாவது TelecomTalk வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இப்போது வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

Google Pay, Paytm யூசர்களுக்கு RBI-யின் அலெர்ட்! உடனே செய்யணும்.. அப்போ தான் உங்க பணத்தை காப்பாற்ற முடியும்!Google Pay, Paytm யூசர்களுக்கு RBI-யின் அலெர்ட்! உடனே செய்யணும்.. அப்போ தான் உங்க பணத்தை காப்பாற்ற முடியும்!

 ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 3ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியது. அதேபோல் இதன் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்து விட்டது..

குறைந்து விட்டது..

தற்போது இந்த பிஎஸ்என்எல் ரூ.94 திட்டத்தில் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது நீங்கள் இந்த ரூ.94 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி, 3ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குரல் அழைப்பு பலன் 100 நிமிடங்களிலிருந்து 200 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. ஆனால் வேலிடிட்டி 90 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைந்து விட்டது.

 மறைமுக நடவடிக்கை

மறைமுக நடவடிக்கை

குறிப்பாக இது கட்டண உயர்வை அமல்படுத்த பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ள மறைமுக நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் முன்பு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் வழங்கும் சில மலிவு விலை திட்டங்களை இப்போது பார்ப்போம்.

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! 2022 இல் இந்தியர்கள் அதிகம் தேடிய விஷயம் என்ன தெரியுமா? Google உடைத்த உண்மைஅவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! 2022 இல் இந்தியர்கள் அதிகம் தேடிய விஷயம் என்ன தெரியுமா? Google உடைத்த உண்மை

பிஎஸ்என்எல் ரூ.18 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.18 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.18 ரீசார்ஜ் திட்டம் ஆனது 2 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும்1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 5 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.49 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.49 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் திட்டம் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க உதவும் இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.

வா தலைவா வா.. உனக்காக இந்தியாவே வெயிட்டிங்: ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் உடன் வரும் Jio Phone 5G.!வா தலைவா வா.. உனக்காக இந்தியாவே வெயிட்டிங்: ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் உடன் வரும் Jio Phone 5G.!

பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் தான். குறிப்பாக இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். மேலும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.99 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை. இருந்தபோதிலும் ரூ.99 ரீசார்ஜ் திட்டம் இலவச காலர் டியூன் (PRBT) நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL has quietly reduced the benefits of its Rs 94 prepaid plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X