2025 புத்தாண்டுக்கு முன்பு இரண்டு மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்த BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா..
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் சமீபத்தில் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தன. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் போட்டியாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமும் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டியுள்ளது. அதுவும் நாளை 2025 புத்தாண்டு பிறக்கவுள்ளது. அதற்கு முன்பு பிஎஸ்என்எல் புதிய ரூ.628 மற்றும் ரூ.215 திட்டங்கள் கொண்டுவந்துள்ளதால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகளை வழங்குகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.628 மற்றும் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 215 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.
அதாவது சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), கேம்ஆன் (Gameon), பிஎஸ்என்எல் டியூன் (BSNL Tunes), லிஸ்ட்ன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஜிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.215 திட்டத்தில் கிடைக்கின்றன.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 628 Prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), ஜிங்க்(Zing) பிஎஸ்என்எல் டியூன் (BSNL Tunes), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








