Home
News

சாரை சாரையாக BSNL-க்கு வரும் மக்கள்.. மலிவு விலை திட்டங்கள்.. தம்பி ஜியோ, ஏர்டெல் கொஞ்சம் ஓரமா நில்லுங்க..

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டண உயர்வை அறிவித்தன. குறிப்பாக இந்த கட்டண உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி மக்கள் வருவது அதிகரித்துள்ளது.

அதாவது ஜியோ நிறுவனம் முதலில் 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது. இதையடுத்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தி அதிர வைத்தது. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை. இப்போது கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட்ட திட்டங்களை வழங்கி வருகிறது.

சாரை சாரையாக பிஎஸ்என்எல்-க்கு வரும் மக்கள்.. மலிவு விலை திட்டங்கள்..

சமீபத்தில் கூட தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 45 நாள் வேலிடிட்டி தரும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்து அதிரடி காட்டியது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களில் சுமார் 27.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.

அதுவும் மொபைல் நம்பரை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற போர்டிங் ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி தான் பலரும் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக நாட்டில் சில முக்கிய இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. அடுத்த மாதம் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிட்டால் இன்னும் அதிக மக்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கத் தொடங்குவார்கள். குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையைப் பெறுகிறது. இத்துடன் உங்களுக்குத் தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

சாரை சாரையாக பிஎஸ்என்எல்-க்கு வரும் மக்கள்.. மலிவு விலை திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 997 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், சேலஞ்சர் அரினா கேம்ஸ், லிஸ்டன் போட்காஸ்ட், வாவ் என்டர்டெயின்மென்ட், ஜிங் மியூசிக், ஆஸ்ட்ரோடெல், பிஎஸ்என்எல் டியூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இதில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL has gained lot of new subscribers after tariff hike by private telcos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X