Home
News

ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் சிறந்த சலுகையை வழங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்நிறுவனம் அனைத்து இடங்களுக்கும் 4ஜி சேவையை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக மலிவு விலையில் சிறந்த போஸ்ட்பெய்ட்
மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ள நிறுவனம் என்றால் அது பிஎஸ்என்எல் தான்.

 பிஎஸ்என்எல் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தை அப்டேட் செய்துள்ளது. அதாவது இதில் கட்டணமில்லா
அன்லிமிட்டட் ஆஃப்-நெட் மற்றும் ஆன்-நெட் கால்கள் செய்து கொள்ளும் புதிய வசதியை வழங்கியுள்ளது.

ஜனவரி 10-ம் தேதியோடு

கடந்த மாதம் வெளிவந்த தகவலின் அடிப்படையில், ஜனவரி 10-ம் தேதியோடு கட்டணமில்லா வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 நமிட அழைப்புகள் உடன் ஆஃப்-நெட் போன்ற திட்டத்தை நிறுத்துவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது இந்த பிளானில் புதிய அப்டேட்களை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

25ஜிபி டேட்டா திட்டத்தை 75ஜிபி

தற்சமயம் வெளிவந்த தகவலின்படி, பிஎஸ்என்எல் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது லேண்ட்லைன்மற்றும் பிற ஆபரேட்டர்களின் எண்களுக்கு அலைக்கும் வகையில் உள்ளது. பின்பு இலவச வாய்ஸ் கால்களும்.வரும் அழைப்பை பகிரும் வசதியையும் சேர்த்துள்ளது. அதேபோல் மாதந்தோறும் 25ஜிபி டேட்டா வழங்க உள்ளது.
அதேபோல் இந்த 25ஜிபி டேட்டா திட்டத்தை 75ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் செய்யும் வசதியையும் அளித்துள்ளது.

ஈரோஸ் நவ் டிஜிட்டல்

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஈரோஸ் நவ் டிஜிட்டல் ஃப்ளாட் பார்மை60 நாட்களுக்கு லோக்தூன் ஃப்ளாட் பார்மின் சந்தா கட்ட தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்

அண்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தையும் திருத்தியது. அதன்படிபிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,999 ப்ரீபெய்ட திட்டம் ஆனது ஒரு பிரபலமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் முன்பு தினசரி 3ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி 1-ஆம்தேதி முதல் இந்த ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்ட

பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மை குறைக்கப்பட்ட போதிலும் வேலிடிட்டி மாற்றப்படவில்லை. அதன்படி பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Bsnl has come up with the best offer on Rs.199 postpaid plan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X